பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14s, சைவசித்தாந்தம் - ஓர் அறிமுகம் சித்து என்றும் வழங்கப்பெறும். பசுவினது அறிவிற்கு அத் தகைய ஆற்றல் இல்லை; அறிவித்தல் அறியும் தன்மையை மட்டும் உடையது. அதனால் அது பருஅறிவு அல்லது துலசித்து எனப்படும். பதியின் இயல்புகளை விளக்கும் போதும் இவையெல்லாம் குறிப்பிடப்பெற்றன. இவண் குறிப்பிட்ட பசுவின் இயல்புகள் அனைத்தும் அதற்கு இயற்கையாய் என்றும் உரிய தன்னியல்புகள் ஆகும். (ஈ) சார்ந்த வண்ணமாதல்: இதன் விளக்கம் ஈண்டு தரப் பெறுகிறது. ஒரு பொருள் தன்னால் சாரப்பெற்ற பொரு ளின் தன்மையையே தன்தன்மையாகக் கொண்டு நிற்பதுவே சார்ந்ததன் வண்ணமாதலாகும். இத்தன்மையே உயிர்களின் உண்மைநிலை எனப்படும் சொரூப இலக்கணம் ஆகும். உயிர் பாசத்தைச் சார்ந்தவழிப் பாசமேயாயும் பதியைச் சார்ந்த வழி பதியேயாயும் நிற்கும் என்பது அறியப்படும். உயிர்கட்கு இன்பத்தை விரும்புதலே இயல்பேயாதலின், இன்பப் பொரு ளாகிய பதியை" அடைதல் உயிரின் இயல்பாக அமைந் துள்ளது; ஒன்றிரண்டு எடுத்துக் காட்டுகளால் இந்த இயல்பைத் தெளியலாம். படிகம் தன்னை அடுத்துள்ள பொருளின் நிறத்தையே தன் நிறமாகக் கொண்டு நிற்பதை உணரலாம். அதாவது படிகம் நீலமணியைச் சார்ந்தபொழுது நீலமாயும் செம்மணியைச் சார்ந்தபொழுது செம்மையாயும் விளங்குவதைக் காணலாம். இதனை நினைந்தே வள்ளுவப் பெருந்தகையும் அடுத்தது காட்டும் பளிங்குபோல்' என்று குறிப்பிட்டுள்ளதை நினைவு 11. இந்நூல் - பக் 45-51 12. அகமகிழ்வரும் தேன், கற்கண்டு, அமிர்தம் - என்றெல்லாம் தாயுமான அடிகள் பதியைக் குறிப்பிடுவது காண்க. (தா.பா. பொருள் விளக்கம் - 4 (இவற்றை ஈண்டு நினைக்கலாம்) 13. குறள் - 706