பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#42 சைவசித்தாந்தம் - ஓர் அறிமுகம் (உ) உயிரின் இடைப்பட்ட நிலை: உயிருக்குச் சார்ந்த தன் வண்ணமே தன்னியல்பாதலின் அஃது எல்லாவகையிலும் இடைப்பட்டதாய் நிற்கும் பொருளேயாயிற்று. அஃதாவது அறிவுடைப் பொருள் எனின் அதற்கு அறியாமை என்பது இருத்தல் கூடாது. அறிவில் பொருள் அறிவித்தாலும் அறிதல் கூடாது. ஆகவே, அறிவுடையதாயினும் அவ்வறிவு அறியா மையால் கவரப்படும் தன்மையுடையதாய், ஒரு கால் அறியா மையால் நிற்றலையும் உடையது என்பது பெறப்படும். படவே, உயிர் அறிவுடைப் பொருளோ, அறிவில் பொருளோ என வினவுவார்க்கு இரண்டும் அல்ல, இரண்டும் தான் என்பதே விடை அஃதாவது, அறியாமையோடு ಕ್ಯಾ-೩ அறியாமையாய் நிற்பினும், அறிவிக்க அறிந்து வருவதால், அவ்வறியாமையின் நீங்கி அறிவுடைப் பொருளோடு கூடி நிற்கும் என்பதாம். அறிவுடைப் பொருள் சித்து என்றும், அறிவில் பொருள் அசித்து' என்றும் சொல்லப் பெறுவதால் உயிர் அவ்விரண் டிற்கும் இடைப்பட்ட () சிதசித்து எனப்படும். எனவே பதி, சித்து பாசம், அசித்து பசு, சிதசித்து என்பது விளங்கும். இவ்வாறே, உயிர்தோன்றி அழியும் பொருளோ? அன்றி என்றும் ஒரு பெற்றியாய் நிற்கும் பொருளோ? என வினவுவார்க்கும் உயிர் இடைப்பட்ட நிலையில் நிற்பது: என்பதே விடையாகும். அஃதாவது, உயிர் தான் தோன்றி நின்று அழிவதில்லையாயினும், தோன்றி நின்று அழியும் பொருளில் ஒன்றி நின்று, அது வழியாகவே தனது அறிவும் அநுபவமும் நிகழ நிற்றலின் தோற்றம், நிலை, இறுதிகளை யுடையதாய் நிற்கும். என்றும் ஒரு பெற்றியாய் நிற்கும் பொருள் சத்து என்றும், தோன்றியழியும் பொருள் அசத்து என்றும் சொல்லப்படுவதால் உயிர் அவ்விரண்டுக்கும் இடைப்பட்ட (ii) சதசத்து என்று சொல்லப்படும். பதி, சத்து பாசம், அசத்து உயிர் - பசு, சதசத்து. -