பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவங்கள் 2. (பசு) 143 உயிர் அருவப் பொருளோ? உருவப்பொருளோ? இரு தன்மைகளையும் உடைய பொருளோ? என வினவுவார்க்கு அவையல்ல; உயிரின் தன்மை எல்லாவற்றையும் தனியே வைத்து உணர்தல் வேண்டும் என்பதே அதற்கு விடை விளக்கம்: (1) உயிர் ஆகாயம்போல் அருவப் பொருள் என்பது பாசஞ்சலர் மதம். உயிர் அருவமாயின், உருவமாகிய உடம்பை எவ்வாறு செயற்படுத்தும்? படுத்த முடியாது. . । உயிர் உருவப் பொருளே’ என்பது பெளராணிக மதம் உருவம் என்பது காட்சிக்குப் புலனாகும் பொருளே யன்றோ? அதனால் உயிரை உருவப் பொருள் என்றால், 'உடம்பே உயிர் என்பதுதான் கருத்தாகி விடும். இது தவறு. “விறகு உருவமாய்க் காணப்பட்டும், நெருப்பு அருவ மாய்க் காணப்படாதும் நிற்றல் போல, ஆன்மா உருவம், அருவம் என்ற இருதன்மைகளையுடையது. என்பர் ஒரு சாரார் (கெளனர்) விறகும் நெருப்பும் வேறுவேறு பொருள்கள்; அவற்றை ஒரு பொருளுக்கு எடுத்துக்காட்டாகக் கூறுதல் பொருந்தாது. இனி, சந்திரன்போல் அருவிருவம் என்னில், உயிரும் சந்திரன்போல சில பொழுதாயினும் காணப்படல் வேண்டும். எனவே, மாறுபட்ட இருதன்மை ஒரு பொருளுக் குக் கூடாமையால் உயிரை அருவுருவம் என்றலும் பொருந்தாது. இங்ங்னமே உயிரின் தன்மை எல்லாவற்றையும் தனியாக வைத்து உணர்தல் வேண்டும். ஆகவே, பதி, சத்து, சித்து குக்குமம் பாசம், அசத்து, அசித்து, துலம் பசு பதியை நோக்க, அசத்து அசித்து துலம் எனவும் பாசத்தை நோக்க 'சத்து, சித்து, சூக்குமம் எனவும் சொல்லத்தக்க ஒரு தனித்தன்மையை உடையது என்பதாயிற்று. பசு சதசத்து,