பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 44 சைவசித்தாந்தம் ஓர் அறிமுகம் சிதசித்து, சூக்குமாகுக்குமம் என்பதற்கு இதுவே பொருளாதல் அறிந்து தெளியப்படுவர். (ஊ) உயிரின் பரிமாணம் (விரி அளவு): இடைப்பட்ட நிலையையுடைய உயிரின் விரி அளவு எவ்வகையினது? எந்த அளவினதாய் உள்ளது? என்பவை விளக்கப் பெறுகின்றன. ( உயிர் அணு ஆகாமை: பாஞ்சராத்திரிகளேயன்றி வேறு சிலரும் உயிரை அனு அளவினதாகக் கூறுவர். உயிர் 'அணு அளவு என அளவுபட்டு நிற்பின் அது சடமாய் விடுமன்றிச் சித்தாகாது." மேலும் பெரிய அளவும் சிறிய அளவுமாய் எண்ணற்ற துளைகளையுடைய உடம்பில் உயிர் யாதேனும் ஒரு துளையில் ஓடி விடாமல் நெடுங்காலம் அதன் கண்ணேகட்டுண்டிருத்தல் கூடுமோ? கன்மத்தால் அவ்வாறு கட்டுண்டு நிற்கும் எனக் கருதினால் சூக்குமமாகிய கன்மம் துலமாகிய உடம்பில் அணுவைத் தடுத்து நிறுத்த முடியு மெனின் விலங்குகள் கயிறு முதலியன இன்றியே தறிகளிலும், கள்வர்கள் விலங்கு முதலியன இன்றியே சிறைக் கோட்டத் திலும், கன்மத்தால் கட்டுண்டு கிடத்தல் வேண்டும். அவை கூடுவதில்லை என்பது தெளிவு. ஆகவே, சூக்குமமாகிய கன்மம் துலப் பொருள் வாயிலாகப் பிணிக்குமே பன்றித் தாமே பிணிக்கமாட்டாது என்பது புலனாகும். இங்ங்னம் புலனாகாவே, உயிர் அணு அளவினதாயின், அஃது உடம்பில் நில்லாது வீழ்ந்து விடும் என்பது தெளிவாகின்றது. அணுவும் தூலப் பொருள் என்பதையும் சிந்திக்கலாம். 16. வைணவத்தில் சித்தாகிய உயிர் அணுவாகி விடும் (வினைப் பயனால்) என்ற கூற்றுக்கு இது மறுப்பாக அமைந்து விடுகிறது. சடப் பொருளுக்குக் கூறும் அணு என்ற அளவு சித்துப் பொருளுக்குக் கூறுவது பொருந்தாது. 'அணு' என்பதை சிறியது என்று கொண்டால் பொருந்துவதாகலாம்.