பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
XV

 இந்த நூல் சைவ சமயத்தைச் சார்ந்த மக்களுக்கும் சைவ சமயத்தைச் சாராத பிறருக்கும், கல்லூரி மாணவர்கட்கும் பயன்படக் கூடியது. சைவ சித்தாந்தத்தை அறிந்து கொள்ள விழையும் ஆர்வலர்களுக்கும் பெரிதும் பயன்படக் கூடியது.

சிவனருள் இருந்தமையால் இந்நூல் என்னைக் கருவியாகக் கொண்டு எழுதப்பெற்றது எழுதுங்கால் என்னுளே என இதயத்தில் நிரந்தரமாக எழுந்தருளியிருக்கும் அரி-அரன் (ஹரிஹரன்) எனக்கு நல்ல உடல் நலத்தையும் மன வளத்தையும் அருளி என்னை ஊக்கவித்தான். அத்தகைய இறைவனின் திருவடிகளை நினைத்து, வாழ்த்தி வணங்கி அமைகின்றேன்.

வேண்டத் தக்க தறிவோய் நீ

வேண்ட முழுதும் தருவோய்நீ

வேண்டும் அயன்மாற்கு அரியோய்நீ

வேண்டி என்னைப் பண்கொண்டாய்

வேண்டி நீயாது அருள்செய்தால்

யானும் அதுவே வேண்டினல்லால்

வேண்டும் பரிசொன்று உண்டென்னில்

அதுவும் உன்றன் விருப்புன்றே.?

மாணிக்கவாசகர்


‘வேங்கடம்’

இங்ஙனம் அடியேன்

AD-13, அண்ணாநகர்,

ந.சுப்புரெட்டியார்

சென்னை - 600 040.

(மெய்கண்டார் அடியன்)


__________

2. திருவா. குழைத்தபத்து 9