பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ł46 சைவசித்தாந்தம் - ஓர் அறிமுகம் வேண்டும். உயிரின் ஆற்றல் உடம்பெங்கும் பரவிநிற்கும் என்பதற்குச் சான்றில்லை. அதனால் இவ்வாதமும் ஏற்க முடியாததாகின்றது. - . (i) உயிர் உடம்பளவு ஆகாமை: சமண சமயத்தினா தாம் எடுத்த உடம்பின் அளவாய் செழுமுகம் போல (அட்டை எனும் நீர்ப்பூச்சி போல நீளுதல் சுருங்குதல்களை அடையும் தன்மையது என்கின்றனர். இஃது உண்மையாயின், பெரிய உடம்பையுடைய உயிர்கள் பேரறிவுடையனவாயும் சிறிய உடலமைப்புடைய உயிர்கள் சிற்றறிவுடையனவாயும் இருத்தல் வேண்டும். அஃதன்றியும், ஒருவகைப் பிறப்பிலேயும் அவ் வாறு வேறுபட வேண்டும். மக்களிலும் பேருடம்புடையோர் பேரறிவுடையவராயும் சிறிய உடம்பையுடைய உயிர்கள் சிற்றறிவுடையராயினும் இருத்தல் வேண்டும். அநபவத்தில் அவ்வாறிருக்கக் காணவில்லை; மாறியும் காணப்படுகின்றது. போர் முதலிய காரணங்களால் உறுப்புக்குறைபட்டவர்க்கு முன்னிருந்த அறிவு குறைந்து காணப் பெற வேண்டும். அவ்வாறு இல்லாமையால் உயிர் உடம்பின் அளவே நிற்கும் தன்மையது என்ற கொள்கை பொருத்தமின்றிப் போகின்றது. (v) உயிர் இறைவனோடு ஒத்த நிறைவுடையது ஆகாமை: ஐக்கியவாத சைவர் இறைவனைப் போல உயிரும் எங்கும் உள்ள பொருள் என்கின்றனர். உயிர் அவ்வாறு எங்கும் உள்ளது எனின், ஒரு காலத்தில் ஐம்பொறிகளிலும் அறிவு நிகழாது. ஒவ்வொரு காலத்தில் ஒவ்வொரு பொறியில் மட்டும் அறிவு நிகழ்ந்ததற்குக் காரணம் கூறல் வேண்டும். மேலும் உடம்பிற்கு அப்பால் அறிவு நிகழாமைக்கும் இறத்தல் பிறத்தல்களால் விண்ணிலும் மண்ணிலும் போதல் வருதல் நிகழ்தற்கும் காரணம் கூறல் வேண்டும். அது கூடாமையால் உயிர் இறைவனைப் போலவே எங்கும் வியாபித்து நிற்கும் என்றலும் பொருந்து மாறில்லாதாகி விடுகின்றது.