பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 சைவசித்தாந்தம் ஓர் அறிமுகம் பொறி கரணங்களைப் பெற்று விண், மண், பாதலம் என்னும் மூவுலகங்களிலும் புல்லாய்ப் பூடாய். கல்லாய் மனித ராய், தேவராய். எல்லாப்பிறப்பும் பிறந் திளைத்து" உழலும் நிலை சகலம் எனப்படும். சகலம்-கலையோடு கூடுதல் எனப்பொருள்படும். கலை-மாயாகாரியம். இந்நிலை யில் உயிருக்கு அறிவு உண்டு; இச்சை செயல் ஆகிய அனைத்தும் உண்டு. வினைகளை ஈட்டி அவற்றின் பயன்களை நுகர்தலும் உண்டு. இந்நிலையில் உயிர் பெரிய பொருளை அறியமாட்டாது; சிறிய பொருளையே பெரிய பொருளாக மயங்கி அவற்றை அடையவிரும்பி முயலும் சிற்றறிவும், சிற்றிச்சையும், சிறு தொழிலும் உடையதாகும். இந் நிலையை மருள்நிலை என்று வழங்கலாம். மருள்-மயக்கம். (இ) சுத்தாவத்தை மேற்குறிப்பிட்ட விண் மண் பாதலம் என்னும் மூவுலகங்களிலும் மாறிமாறிப் பிறந்து இன்பத்தைப் பெறவும் துன்பத்தைப் போக்கவும் விரும்பும் உயிர் அவற்றிற்குரிய வழிவகைகளை ஆராய்ந்து அறிகின் றது, அவ்வழிகளில் முயன்று எண்ணிய பயன் எண்ணியவாறே கைகூடுமாயின் இன்பத்தை அடைகின்றது. கைகூடாதவழி துன்பத்தை நுகர்கின்றது. விருப்பு வெறுப்புகளையும் அடை கின்றது. இந்தச் சுழற்சியால் ஆணவமலத்தின் சக்தி மெலி வடைவதால் சிறு பொருள்களின் மீதுள்ள நாட்டம் மாறிப் பெரும் பொருளை அடையும் நோக்கம் உண்டாகின்றது. அப்பொழுது இறைவன் குருவாகி வந்து முப்பொருள்களின் இயல்புகளை உள்ளவாறு உணர்த்தி மெய்யுணர்வைத் தருகின்றான். இந்த மெய்யுணர்வால் உயிரும் மும்மலங்களி னின்றும் நீங்கி நின்மலனாகிய இறைவனை அடைந்து இன்புற்றிருக்கும் நிலை எய்தப் பெறுகின்றது. இந்த நிலையே சுத்தம் என்று வழங்கப் பெறுகின்றது. மாசாகிய மலங்களினின் 'திைடுவா. சிவபுரா அடி வரு 31