பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i 60 சைவசித்தாந்தம் - ஓர் அறிமுகம் (7) மூவகை உயிர்கள் இங்ங்னம் அளவிலவாகிய உயிர்கள் பலவும் மூன்று வகையினவாய் உள்ளன. என்பது சித்தாந்தக் கொள்கை யாகும். இவ்வகை அந்த உயிர்களின் பாசப் பிணிப்பு பற்றி அமைந்தனவாகும். ஆணவம், கன்மம், மாயை எனப் பாசம் மூன்று என்பதை நாம் அறிவோம். இவை மூன்றும் மலம்அழுக்கு எனப்படும். இம் மும்மலங்களுள் ஒன்றையே யுடைய உயிர்கள், இரண்டு மட்டும் உடைய உயிர்கள், மூன்றையும் உடைய உயிர்கள் என்னும் முறைமையில் உயிர்கள் அனைத்தும் மூவகைப் படுவனவாகும். மும்மலங் களுள் மூலமாய் உள்ளது ஆணவ மலம் என்பதை நாம் அறிவோம். - ஒரு மலம் உடைய உயிர்கள் என்பன ஆணவம் ஒன்றையே உடையனவாகும். ஒருமலம் உடையவர் விஞ்ஞானகலர் என்று வழங்கப் பெறுவர். ஆண்வத்தை அடுத்து நிற்பது கன்மம். அதனால் இருமலம் உடைய உயிர்கள் ஆணவம் கன்மம் என்னும் இரண்டையும் உடையனவாகும். இருமலம் உடையவர்கள் பிரளயாகலர் என்று பேசப் பெறுவர். மூன்றாவது மலம் மாயை. மூன்று மலங்களை உடைய உயிர்கள் ஆணவம், கன்மம், மாயை என்ற மூன்றையும் உடையன. மும்மலத்தையும் உடையவர்கள் சகலர் என்ற பெயரைப் பெறுவர். இதனைத் திருமூலர் ஆணவ மலமாகும் விஞ்ஞான கலருக்கும் பேணிய மாயை பிரளயா கலருக்கே 49. வைணவத்திலும் ஆன்மாக்கள் மூவகைப்படும். அங்கு பத்தர்கள் (தளைப்பட்டவர்கள்), முக்தர்கள், நித்திய சூரிகள் என்று இவர்கள் வகைப்படுத்தப் பெறுவர் (டாக்டர் ந.சுப்புரெட்டியார் முக்தி நெறி பக். 27 காண்க.)