பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. சித்தாந்த சாத்திரங்கள் இந்திய தரிசனங்களில் மேனாட்டு தரிசனங்களில் இருப்பது போன்று சமயம் வேறு, தத்துவம் வேறு என்று பிரித்துப் பேசும் மரபு இல்லை, சைவ சித்தாந்தமாயினும் சரி, விசிட்டாத் வைதமாயினும் சரி சமயமும் தத்துவமும் இணைந்தே (integrated) இருக்கும் மரபுதான் உண்டு. இந்த நோக்கத்தின் அடிப்படையில் இந்நூலை அணுக வேண்டும். "சைவ சமயம், சாத்திரங்கள் - வளத்தால் செழித்தது; வைணவ சமயம், உரை வளத்தால் செழித்தது.” என்று மக்க ளிடையே வழங்கும் மரபு ஒன்று உண்டு. ஊன்றி நோக்கினால் வைணவத்திலும் சாத்திரங்களுக்குக் குறைவில்லை. அஷடா தச இரகசியங்கள், தேசிகப் பிரபந்தம் (தமிழ்க் கவிதை களாலானது) அவர்தம் இரகசியத் திரய சாரம்’ (திரயம்மூன்று) என்றனவும் உள்ளன. ஆனால் திருவாய்மொழிக்கு அமைந்துள்ள, மணிப்பிரவாள நடையிலமைந்த உரைவளம் போல் தேவார திருவாசகங்கட்கும், பிற திருமுறைகட்கும் அமையவில்லை என்று சொல்லி வைக்கலாம். நிற்க. சைவ சித்தாந்த சாத்திரங்கள் பதினான்கு அவை: 1. திருவுந்தியார் 8. திருவருட்பயன் 2. திருக்களிற்றுப்படியார் 9 வினா வெண்பா 3. சிவஞான போதம் 10. போற்றிப் பஃறொடை வெண்பா. 2. இது மணிப்பிரவாள நடையில் அமைந்தது.