பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவங்கள் - 3 (பாசம்) . $75 (9) பிணிக்கும் வகையில் வேறு பாடுகள்: தூலம், முதலிய மூன்றும் உயிர்களைப் பிணிக்கும் வகையிலும் வேறு படும். ஆணவமலம் துலமாய் வலிதாய்ப் பற்றிய உயிரை, பின் கன்மம் மாயை என்னும் இரு மலங்களும் வந்து பற்றும். அதனால் இவை மும்மலங்கள உடைய உயிர்களாகும். ஆணவமலம் சூக்குமமாய் மெலிதாய்ப் பற்றிய உயிரை, பின் கன்மம் மாத்திரமே வந்து பற்றும். இவை இருமலம் உடைய உயிர்களாகும். அதி சூடக்குமமாய் மிகவும் மெலிதாகப் பற்றிய உயிரை, பிறகு எம்மலமும் வந்து பற்றாது அதனால் அவை ஆணவமலம் ஒன்றேயே கொண்டு ஒருமலம் உடைய உயிர் களாகத் திகழும். - ... - உயிர் வகைகள் ஒருமலம் உடைய உயிர்கள் விஞ் ஞான கலர்' என்று வழங்கப் பெறும். விஞ்ஞான கலர்' என் பதற்கு விஞ்ஞானத்தால்-பேரறிவால்-கலை நீங்கப் பெற்றவர்’ என்பது பொருள். கலை என்றது மாயையை. எனவே அஃது இல்லாத உயிர்கள் அகலர் - கலை இல்லாதவர் என்று வழங்கப் பெறுவர். இருமலம் உடைய உயிர்கள் பிரளயா கலர் என்று வழங்கப்பெறுவர். அதாவது பிரளயத்தில் கலை நீங்கப் பெற்றவர் என்பது இதன் பொருள் ஆகும். மும்மலம் உடைய உயிர்கள் சகலர் என்று வழங்கப்பெறும். சகலர்' என்பதற்குக் கலையோடு கூடியவர் என்பது பொருள். இவை முன்னரும் குறிப்பிடப் பெற்றுள்ளன. பந்தவேறுபாடுகள்: இனி ஒவ்வொருவகையிலும் உயிர்தோறும் உள்ள பந்தமும் வேறுவேறாகும். மூலமலமாகிய ஆணவமலப் பிணிப்பின் வேறுபாட்டிற்கு ஏற்ப, மற்றைய Tஒவ்வொரு வகையான அறியும் திறனைப் பெற்றிருப்பதை அறிவார். இத்தகைய அநுபவம்தான் உயிர்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையாக அறிவதிலும் உள்ளது என்பது தெளிவாகும். • , . .