பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

} 76 சைவசித்தாந்தம் - ஓர் அறிமுகம் மாயை கன்மங்களும் அமையும் என்பது உணரப்படும். ஆணவப்பிணிப்பு ஒருவகையாய் இல்லாமல், இங்ங்னம் பல்வேறு வகையாய் இருத்தலின், உயிர்கள் பந்தத்தினின்றும் நீங்கி வீடு பேறு பெறுதலும் ஒரு காலத்தில் நிகழாமல் பல்வேறு காலத்தில் நிகழ்கின்றது என்பது தெளியப்பெறும் இவையே ஆணவ மலத்தின் திருவிளையாடல்கள் ஆகும். (3) கன்ம மலம் - இலக்கியத்தில் கன்மம் என்பதும் கருமம் என்பதும் ஒன்றே. நாம் "வினை என்று சொல்லுகின்றோமே அதுவும் கன்மமே. நாம் செய்யும் செயல்கள் யாவும் கன்மங்களேயாகும். ஆனால் தத்துவஞான உலகில் கன்மம் என்ற சொல் சற்று விரிந்த கருத்துடையது. ஒவ்வொரு செயலுக்கும் ஒரு நோக்கமுண்டு; பலன் உண்டு. அப்பலனை அநுபவித்தலும் ஒரு செயலாகும். இவை அனைத்தையுமே கன்மம் என்ற சொல் குறிக்கும். செயல் மட்டுமின்றி எண்ணம், சொல் ஆகியவையும் கன்மத்துள் அடங்கும். எல்லாச் செயல்கட்கும் பலன் உண்டு. அப்பலன்கள் யாவும் செய்தவனையே சென்று அடையும். சில செயல்களின் பலன்கள் உடனேயே சேரும். சில செயல்களின் பலன்கள் சிலகாலம் சென்று சேரும், இந்த உண்மைகளைப் பொதுவாக எல்லாரும் ஒப்புக் கொள்வர். இந்தக் கன்மத்தைப் பற்றிச் சைவ சித்தாந்தம் கூறுவதை ஈண்டுக் கோடிட்டு காட்டப் பெறும். பதி உண்மை, பசு உண்மை இவற்றைக் காட்டியது போல் வினை உண்மையையும் காட்டுவது இன்றியமையாத தாகின்றது. கன்மம் என்பதும் வினை என்பதும் ஒன்றையே குறிக்கும். எல்லா உயிர்களும் இன்பத்தையே விரும்புகின்றன. எனினும் அவை துன்பத்தையும் நுகர நேரிடுகின்றது. சிலருக்