பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவங்கள் - 3 (பாசம்) 179 விளக்கம்: ஒரு காரியத்திற்கும் பல காரணங்கள் இருப்பினும், அவற்றுள் ஒன்றே முதன்மையுடையதாக இருக்கும் மற்றவை அக்காரியம் முற்றுப் பெறத் துணையாக அமையும். மேற்குறிப்பிட்ட செடியின் தோற்றத்திற்கு வித்து முதற்காரணம் முதன்மை வாய்ந்தது. மற்றவை யாவும் அவை முளைத்துப் பயன் தருவதற்குத் துணையாய் அமைவனவே. இங்ங்னமே உயிர்களின் இன்ப துன்பங்களுக்கு வினைமுதற் காரணம்; முயற்சி துணைக் காரணம் என்பதை அறிந்து தெளியலாம். முதற்காரணத்திற்கும் துணைக்காரணத்திற்கும் வேறுபாடு என்ன? ஒன்று இன்றிப் பிறகாரணங்கள் யாவும் உள்ள வழியும் காரியம் தோன்றாததும், அஃது உள்ள பொழுது காரியம் தோன்றுதலும் நிகழுமாயின், அந்த ஒன்று எதுவோ அதுவே முதற்காரணம்: ஏனைய பலவும் துணைக்காரணங்கள். நிலத்தைப் பண்பட உழுது நீர்ப்பாய்ச்சி எருவிட்டாலும், நிலத்தில் விதை இல்லையேல் பயிர்தோன்றாது; விதை இருப்பின் பயிர் தோன்றும் ஏனையவை துணைக்காரணங்கள். உழுதல் முதலிய முயற்சிகள் யாவும் விதையாகிய முதற் காரணம் செடியைத் தோற்றுவித்தற்குத் துணையாவனவாகும். இதுபோலவே இன்பத்தை எய்தற்பொருட்டு எவ்வளவு முயற்சி செய்தாலும் இன்பத்தைத் தருகின்ற வினை இல்லாத பொழுது இன்பத்தை அடையமுடியாது. அஃதிருப்பின் அம்முயற்சியால் இன்பம் கிடைக்கும். அதனால் வினை முதற்காரணம் முயற்சி துணைக் காரணம் என்பது அறிந்து தெளியப்படும். - முயற்சி திருவினையாக்கும் என்ற வள்ளுவரின் வாக்கு வினைபயன் தரும் முறையைக் கூறியதாகும். மேலும் அப்பெருமான், தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்" 16. குறள்-619 (ஆள்வினையுடைமை)