பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 சைவசித்தாந்தம் - ஓர் அறிமுகம் என்றும், ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழாது உஞற்றுபவர்." என்றும் கூறியுள்ளமை வினையை மறுத்துக் கூறியுள்ளமை போல தோன்றும். ஈண்டுக் குறிப்பிட்ட முதல் குறளில் பயன் தரும் வினை உள்ள பொழுது கருதிய பயன்கருதியவாறே கிடைக்கும்; அஃது இல்லையாயின், முயற்சிக்குப் பயன் கிடைக்கும்; அதனால் எப்பொழுதும் முயற்சியை மேற்கொள் ளுதல் நலம் என்று கூறியுள்ளமை உன்னத்தக்கது." இரண்டாவது குறளில் “வினை என்பதும் முன்னைய பல பிறப்புகளில் செய்த முயற்சியின் மாற்று வடிவந்தான்” என்பது சிந்திக்கத்தகும். அதனால் இதனை இந்த ஒரு பிறப்பில் அளவிடற்கரிய பெருமுயற்சி கொண்டு எதிர்த்தால் புறங் காணுதல் கூடும் என்று கூறியுள்ளதையும் கருதலாம். அது 'வினை உண்டு என்னும் கொள்கைக்கு மாறாதல் இல்லை யல்லவா? இங்ங்னம் இப்பிறப்பில் செய்யும் பெருமுயற்சியால் மறுபிறப்பில் செய்த வினையை வெல்லுதல் எங்கோ அத்தி பூத்தமாதிரி ஒன்றிரண்டு இடங்களில் கூடுவதன்றி, எங்கும் எளிதில் பெரும்பான்மையாய் நிகழ்வதன்று. வினையின் முன் முயற்சி தோல்வியடைவதுதான், இதுபற்றியே வள்ளுவர் பெருமான். - ஊழிற் பெருவலி யாவுள? மற்றொன்று சூழினும் தான்முந் துறும்.' என்னும் குறளில் ஊழின் வலியை வற்புறுத்திக் கூறுகின்றார் என்பது உணரப்படும். மேற்குறிப்பிட்ட இரண்டு குறள்களிலும் 17. குறள் - 620 (ஆ2) - 18. உழைத்தால், அன்றாடக் கூலிக்குப் பஞ்சமில்லை யல்லவா? 19. குறள் - 380. (ஊழ்)