பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவங்கள் . 3 (பாசம்) | 8 | . $ தெய்வம் ஊழ் என்பவற்றால் வினை உண்மை என்று கூறியிருத்தலையும் கண்டு தெளியலாம். வினையின்மை என் னும் கருத்தும் இவற்றில் எவ்வாற்றானும் பெறவைக்கவில்லை என்பதும் உணரப்படுமே. துணைக்காரணங்கள் இன்பதுன்பங்களுக்கு வினையே முதற்காரணம் என்று அப்பெருமான் கூறியதோடன்றி, அவற்றிற்குத் துணைக்காரணங்களாகிய முயற்சி, அறிவு என்பவற்றையும் வினையே தருவதாகக் கூறியுள்ளதும் ஈண்டு எடுத்துக் காட்டப் பெறுகின்றது. ஆகூழால் தோன்றும் அசைவின்மை, கைப்பொருள் போகூழால் தோன்றும் மடி’ (அசைவு-மடி) பேதைப் படுக்கும் இழஆழ் அறிவகற்றும் ஆகலூழ் உற்றக் கடை. " நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன் உண்மை அறிவே மிகும்.’ - - என்ற குறட்பாக்களில் இக்கருத்து விளங்கக் கூறியுள்ளதைக் காணலாம். - ... - கன்மமல உண்மை: இயற்கையில் சுறுசுறுப்பாக இருக்கும் ஒருவர் ஒரு குறிப்பிட்ட சமயத்தில் சுறுசுறுப்பின்றிச் சோம்பல் கொண்டு இருந்து அச்சோம்பலின் விளைவாகப் பெரியதோர் இழப்பினை அடைதல் உண்டு என்பதற்கு வாழ்க்கையைக் கூர்ந்து நோக்குவோர் நன்கு அறிவர். அவ ரைச் சோம்பல் கொள்ளச் செய்தது அவரது தீவினையே யாகும். இயற்கையில் நுண்ணறிவும் பெருங்கல்வியும் உலக 20. குறள் - 371. (ஊழ்) . - 21. மேலது - 372 (ஊழ்) 22. மேலது -373 (ஊழ்)