பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவங்கள் -3 (பாசம்) 183 (பழவினை - கன்மம் கிழவன் - உரிமையுடையவன்) என்று வினையின் வலியை விளக்குவர். ஊழை நினைத் தால் சிலப்பதிகாரம்' என்ற காவியம் நினைவிற்கு வாராமல் போகாது. ஊழின் வலியை வலியுறுத்தற் பொருட்டே எழுந்த காப்பியம் அல்லவா? ஊழ்வினை உறுத்து வந்துட்டுவதைக்' கோவலன் வாழ்க்கை தெளிவாகக் காட்டுகிறது. இப்பிறப்பில் யாதொரு தீங்கும் செய்யாத கோவலன் கள்வன் எனக் கருதப் பெற்றுக் கொல்லப் பெறுகின்றான். முற்பிறப்பிலே அவன் களவு செய்யாத ஒருவனைக் கள்வன் எனக் கூறிக் கொல்வித்தவன். அத்தீவினையின் பலனையே இப்பிறப்பில் அவன் அநுபவிக்கின்றான். கன்மம்' என்பதும் ஊழ்' என்பதும் இதுவேயாகும். • . இராமகாதையில் கைகேயியின் கூடாத செயலுக்குச் சீற்றம் கொண்டு வெகுண்டு எழுந்த இலக்குமணனை நோக்கி எல்லாம் விதியின் பிழை என்று அமைதி கூறுவான் இராமன்.' பேறிழ வின் மொடு பிணிமூப்புச் சாக்கா டென்னும் ஆறும்முன கருவுட் பட்டது அவ்விதி அநுப வத்தில் ஏறிடும்’ என்று கன்மத்தை விளக்குவார் அருணந்தி சிவம். இக்கூறிய பல செய்திகளைக் கொண்டு வினை என்றும் உண்டு’ என்பது தெளியப்படும். - (4) கன்மமலம்-சித்தாந்த அடிப்படையில் ஆணவமலம் இயற்கை (சகச) ഥു, மூலமாயும் இருத்தலால், அதனை நீக்குதற் பொருட்டே கன்ம மலமுட 26. கம்பரா.அயோத்தி. நகர் நீங்கு-134 27. சித்தியார்-2.9