பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 சைவசித்தாந்தம் ஓர் அறிமுகம் தலுக்கு அநுகூலம் செய்து உடன் நிற்குமாறுபோல, மாயாமலம் அந்தத் துக்கங்கள் தோன்றுவதற்குத் துணைக்காரணமாய்த் தன் காரியமாகிய தனு கரணம் முதலியவற்றையும் உயிரையும் அசைவித்து நிற்கும். உமி அம்முளை தோன்றுவதற்கு நிமித்த காரணமாய் இருப்பது போல் ஆணவமலம் அந்தத் துக்கத் தோற்றத்திற்கு நிமித்த காரணமாக நின்று அவற்றை முருகு வித்து உயிர்நுகருமாறு நிலைபெறச் செய்யும். இந்த ஆன்மா வின் சுகதுக்கங்களுக்கு ஆணவம் கன்மம் மாயை ஆகிய மூன்று மலங்களும் நிமிந்தம், முதல், துணை ஆகிய மூன்று காரணங்களாக அமைவது குறிப்பிடத்தக்கது. இங்ங்ணமாயி னும், ஆணவத்தைச் சகசம்' என்றும் ஏனைய இரண்டையும் ஆகந்துவம்’ என்றும் கூறுவதுவும் விளைவும் ஆகிய முறைமை பற்றியேயாகும் என்பது சிந்தித்து ஒர்ந்து உணரப்படும். - - - - மூலகன்மம் செயற்படுதல் மூல கன்மம் நன்மை, தீமை என்று பாகுபாடு அடையாமல் பொதுவாய் நிற்கும். பின்னர் அது செயற்படும் காலத்தில் நல்வினையும் தீவினை யும் என இரண்டு வகையாய்ச் சிறப்புற்றுச் செயல்பற்றிப் பலவாகித் திகழும், ஆணவபந்தத்திற்கு ஏற்பவே மூலகன்ம பந்தமும், மாயாமல பந்தமும் உயிர்கட்கு உள்ளன என்பதை நாம் அறிதல் வேண்டும். இப்பந்தங்கட்கு ஏற்ப இறைவன் தனது சக்தியால் மாயையினின்றும் குக்கும் உடம்பைப் படைத்துத் தருவான், சூக்கும் உடம்பை அடைந்த உயிர்கள் ஆணவபந்தம் சிறிது நீங்கப் பெற்றுத் தம் மூலகன்மத்திற்கு ஏற்ப அறிவு, இச்சை செயல்கள் விளங்கப்பெறும். இங்ஙனம் விளங்கப் பெற்றவழி அவற்றிற்கு உண்டாகும் விருப்பு வெறுப்புகளே அவற்றிற்கு நல்வினையும் தீவினையுமாய், முடியும். அவ்வினைக்கேற்ப அவற்றிற்கு இறைவன் துல உடம்பைப் படைத்துத் தருகின்றான். எழுவகைப் பிறப்பு