பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 88 சைவசித்தாந்தம் - ஓர் அறிமுகம் விளக்கப்பெற்றுள்ளது. இல்லது தோன்றாது என்ற சற்காளிய முறைப்படி, தோற்றமும் அழிவுமுடைய பொருள்கள் முன்சூக்குமமாய் விளங்காது இருந்த காரணநிலையினின்றும் நீங்கித் துரலமாய் விளங்கி நிற்கும் நிலையே தோற்றம் பின் துலமாய் விளங்கி நின்ற காரியநிலையினின்றும் நீங்கி முன் போலச் சூக்கும நிலையாய் விளங்காது காரண நிலையை அடைவதே அழிவு' என்று முன்னர் விளக்கப்பெற்றதை ஈண்டு நினைவு கூரலாம்.

  • சிற்காரிய முறை தூலப்பொருளில் தெளிவாகத் தெரிவது போல் சூக்குமப் பொருளில் தெளிவாகத் தெரிவதில்லை. எடுத்துக்காட்டாக மண்காரணம் பானை காரியம். அதனால் பானை தான் தோன்றுவதற்கு முன்பும் மண்ணில் சூக்குமமாய் உள்ளது என்று கொள்கின்றோம். வினை அல்லது கன்மம் என்னும் காரியத்திற்கு, பானைக்கு மண்போல ஒரு காரணப் பொருளைச் சொல்லவில்லையே என்ற போக்கில் நம் சிந்தனை செயற்படக்கூடும். இதனையும் விளக்க வேண்டும். பானை என்னும் காரியம் துலப்பொருளாதலின் அதற்குக் காரணம் மண் என்பதை எளிதில் உணரமுடிகின்றது; உணர்த்தவும் படுகின்றது. வினை சூக்குமப் பொருளாதலின், அதன் காரணம் இன்னது என எளிதில் உணரமுடிவதில்லை. 'இல்லது தோன்றாது உள்ளது தோன்றும் என்பது உண்மை யாதலின் வினை ஒருவனால் செய்யப்படுவதற்கு முன்னும் உள்ளதேயன்றி இல்லாதது அன்று. முன்பு இயற்கையாயுள்ள வினையைத்தான் பின்பு ஒருவன் செயற்கையாகச் செய் கின்றான். இயற்கையாய் உள்ள காரணவினை காரண கன்மமும், பின்பு அதனை ஒருவன் செயற்கையாகச் செய்யும் வினை காரிய கன்மமும் ஆகும். காரண கன்மம்தான் 'மூல கன்மம் என்று அடைமொழி தந்து விளக்குவர் சித்தாந்திகள்.