பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

}90 சைவசித்தாந்தம் - ஓர் அறிமுகம் அஃதாவது, ஓர் இடம் விட்டுப் பிறிதோர் இடத்தை அடைதல். இன்னும் இதைத் தெளிவாகச் சொல்லவேண்டுமானால் “பொருள்களின் அசைவு எனலாம். இந்த அசைவு அந்தந்தப் பொருளிலும் அதனதலாலே இயற்றப்படுகின்றது என்பது உண்மையாகும். ஆயினும், அவ்வசைவுத் தன்மையை எந்தப் பொருளும் தானே தன்னிடத்தில் அமைத்துக் கொள்ள வில்லை, அஃது இயற்கையாய் அதனிடத்து முன்பே அமைந் துள்ளது. இத்தன்மை காலம் இடம் முதலிய சூழ்நிலைகளுக்கு ஏற்ப அதனினின்றும் வெளிப்படுகின்றது என்பது தெளிவாகும். அவற்றுள் அசைவுத்தன்மை அல்லது புடைபெயரும் தன்மை போன்றது காரணகன்மமாகிய மூல-கன்மம். அசைவு அல்லது புடைப்பெயர்ச்சி போன்றது காரியகன்மம். மேலும் விளக்கம்: 'குயவன் பானையை வனைந்தான் என்று சொல்லும்போது பானையை வனைந்தவன் குயவன் தான் என்பதில் ஐயமில்லை. ஆயினும் வனைதல்' என்ற தொழிலை அவன் அன்று உண்டாக்கவில்லை; அது முன்பதா கவே உள்ளது. அங்ங்ணம் அத்தொழில் முன்பதாக இல்லை யென்றால், இப்பொழுது அதனை அவன் செய்ய இயலாது. ‘வனைதல் என்ற தொழில் என்றும் இருப்பதால் அதனைக் குயவன் தான் விரும்பும்போது விருப்பமான இடத்தில் விருப்பமான வகையில் செய்கின்றான். இப்படியே தான் உலகி லுள்ள மற்ற எல்லாத்தொழில்களின் நிகழ்ச்சிகளும் இக்காலப் புதிய அறிவியல் நுட்பத்தால் நடைபெறும் நிகழ்ச்சிகளும் நிகழ்கின்றன என்பது உளங்கொள்ளத் தக்கது. தொல்காப்பியரின் கருத்து பண்டைய இலக்கண மாகிய தொல்காப்பியத்திலுள்ள ஒரு நூற்பாவைக் கொண்டும் இதனை விளக்கலாம். வினையே செய்வது செயப்படு பொருளே நிலனே காலம் கருவி என்றா