பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவங்கள் - 3 (பாசம்) 191 இன்னதற் கிதுபய னாக வென்னும் - அன்ன மரபின் இரண்டொடும் தொகைஇ ஆயெட் டென்ப தொழில்முதல் நிலையே' இந்த நூற்பாவில் தொல்காப்பியர் “ஒரு தொழில் நிகழ்ச்சிக்கு முதல் நிலையாக எட்டுப் பொருள்கள் வேண்டப்படும்” என்ற கருத்தைத் தெரிவிக்கின்றார். இங்கு முதல் நிலை-காரணம். தொழில் முதல் நிலை - தொழிலுக்குக் காரணம். “தொழிலுக்கு உள்ள காரணங்களுள் தொழிலும் (வினையும்) ஒன்று’ என்று அவர் கூறியிருப்பதுதான் நம் சிந்தனைக்கு உரியது. தொழி லுக்குக் காரணம் என்று சொல்லுவதிலிருந்து தொழில்காரியம்’ என்பது வெளிப்படையாகத் தெரிகின்றதன்றோ? காரணங் களைக் குறிப்பிடும் இடத்திலும் வினை என்ற ஒன்றைக் கூறுவார். எனவே, அவர் காரணவினை (காரக வினை), 'காரிய வினை என்று வினையை இரண்டாகக் கொள்கின்றார் என்பது மிகத் தெளிவு. "வினையும் தொழிலும் வேறு என்பது இச்சூத்திரத்தான் உணர்வதற்கு வினை என்று எடுத்துத் தொழில் முதல் நிலையே’ என முடித்தார்” என்ற கருத்து நினைவில் கொள்ளத்தக்கது. மேற்கூறிய காரணகாரியத்தைத் தான் இங்கு நாம் மூலகன்மம்' என்கின்றோம். இதனை மாதவச் சிவஞான யோகிகள் தமது மாபாடியத்திலும் விளக்கி யிருத்தலைக் காணலாம். மேலும் விளக்கம்: முன்னர்க் காட்டிய எடுத்துக் காட்டினைக் கொண்டு இதனை மேலும் தெளிவாக்கலாம். வனைந்தான் என்பதற்கு வனைதல் என்பது முதல் நிலை. இங்ங்னமே பிறவற்றிற்கும் முதல் நிலைகள் உள்ளன.எனவே பல்வேறு வகைப்பட்ட தொழில்கட்கும் முதல்நிலையாய்ப் பொதுப்பட நிற்கும் முதல் நிலை ஒன்று உண்டு, அதனையே நாம் மூலகன்மம் என்று சிறப்பாகக் குறிப்பிடுகின்றோம். 31. தொல். சொல். வேற்றுமை மயங்கியல்-29