பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 சைவசித்தாந்தம் - ஓர் அறிமுகம் அது சிறப்பாக இன்னசெயல் என்று சொல்ல ஒண்ணாதபடி நிற்கும். இதுவே மேலே புடைபெயரும் தன்மை-அசையும் தன்மை என்று குறிப்பிடப்பெற்றது. இத்தன்மை காலம், இடம், கருவி முதலியவற்றோடு கூடிச் சிறப்பு வகையில் நிகழும் பொழுதே வனைந்தான், கொடுத்தான், உண்டான், என்றாற் போல இஃது இன்ன செயல்' என்று சிறப்பு வகையில் குறிப் பிட்டுச் சொல்லும் படியாக அமையும். எனவே, காரணகன்ம மாகிய மூலகன்மம் பாகுபாடின்றி ஒன்றேயாய் நிற்கும் என்பது உளங்கொள்ளப்படும். காரியகன்மம் நல்லது தீயது என்று இருபெரும் பிரிவினவாய் விரிந்து ஒவ்வொன்றும் பற்பல வகையாய் விரிய, எண்ணிறந்தனவாகும். இவற்றுள் உயிர்கட்கு இன்பமாயும், துன்பமாயும் வந்து எப்பொழுதும் பந்திப்பது காரிய கன்மமேயாகும். ஆதலின், அதுவே எங்கும் பெரும்பான்மையாய் எடுத்துச் சொல்லப்படும். எனவே, மேலே குறிப்பிட்ட தொல்காப்பிய நூற்பாபோலவே, சில இடங்களில் மூலகன்ம உண்மையும் குறிப்பிட்டுக் காட்டப்பெறும். இருவினைப் பாசமும் மலக்கல் ஆர்த்தலின் வருபவக் கடலில்வீழ் மாக்கள் ஏறிட அருளுமெய் அஞ்செழுத் தரசை இக்கடல் ஒருகல்மேல் ஏற்றிடல் உரைக்க வேண்டுமோ? என்ற திருப்பாடலில் சேக்கிழார் அடிகள் “ஆன்மாக்கள் "ஆணவம், கன்மம், மாயை' என்னும் மூன்று கற்களை நல்வினை தீவினை என்னும் இரண்டு கயிறுகளால் கட்டி பிறவியாகிய கடல்களில் தள்ளப்பட்டுள்ளன என்று குறிப்பிடு கின்றார். இங்கு மூலகன்மத்தைக் கல்லாகவும், அதன் காரிய மாகிய புண்ணிய பாவங்களைக் கயிறுகளாகவும் பிரித்து உருவகம் செய்திருத்தலைக் கூர்ந்து நோக்கி அறியலாம். மணிவாசகப் பெருமானும், r 32. பெரி.புரா. திருநாவு-129