பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 சைவசித்தாந்தம் - ஓர் அறிமுகம் பொய்ம்மையிலும் அடங்கும். காயத்தால் செய்யப்பெறும் வினைகள் நன்றி, ஈகை, இன்னா செய்யாமை, புலால் உண்ணாமை முதலிய நற்செயல்களும், களவு, கொலைகள் உண்டல், புலால் உண்டல் முதலிய தீச்செயல்களுமாகும். பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தானே வரும்" - என்ற குறள் உடம்பில் வினை உண்டாதலைத் தெரிவிக் கின்றது. செய்யும் வினை மிகக் கொடுமையாக இருப்பின், விளையும் பயன் விரைவில் உண்டாகும் என்பதையும் இப்பா உணர்த்துகின்றது. ஒர் உண்மை: மனம் மொழி மெய்களால் நினைவு, சொல் செயல் என்பன தூலமாய் நிகழ்ந்த நிலையினின்றும் நீங்கிச் சூக்குமுமாய் நிலைபெற்று நிற்கும் பின் காலம் வரும் போது தம் பயனை உயிர்கட்குத் தரும். துலமாய் நிகழ்வதே இருவினைகட்கும் தோற்றமாகும்; பின் அவை சூக்குமுமாய் நிற்றல் நிலைபேறு ஆகும்; பின் காலம் வந்தபொழுது தம் பயனைக் கொடுத்து நீங்குதலே அவற்றின் அழிவு ஆகும். 'அழிதல் என்பது, தூலநிலையை விட்டுச் சூக்கும நிலையை அடைதலாகும்; எந்தப் பொருளும் எக்காலத்திலும் அடி யோடு இல்லாதொழிதல் இல்லை? - இக்கருத்து இந்நூலில் பல இடங்களில் குறிப்பிடப்பெற்றுள்ளதையும் நினைவு & IT@ssis). - அறிந்தும் அறியாமலும் செய்யப்பெறுபவை: மன வாக்குக் காயங்களால் செய்யப்பெறும் வினைகள் அறிந்து செய்வனவும் அறியாது செய்வனவும் என இருவகையாகப் பிரித்துப் பேசப்பெறும். அறிந்து செய்வன புத்தி பூர்வம் எனவும், அறியாது செய்வன 'அபுத்தி பூர்வம் எனவும் 36. மேலது.-319 (இன்னா செய்யாமை)