பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 சைவசித்தாந்தம் - ஓர் அறிமுகம் மேலும் உந்தியும் களிறும் திருவியலூர் உய்ய வந்த சந்தானத்தில் தோன்றியவை. இந்த இருதிறத்து நூல்களும் நுவலும் பொருளால் ஒன்றுபட்டவை. ஆயினும் அவற்றைத் தெரிவிக்கும் முறையில் சிறிது வேறுபாடு உடையவை. இவ்விரண்டு நூல்களும் சித்தாந்தப் பொருள்களை உபதேச முறையால் கூறுகின்றன. இங்குப் பரபக்கப் பார்வைக்கே இடம் இல்லை. இவை அநுபவத்தை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ளன. அதனால் இவை அறுபான் மும்மை நாயன்மார் முதலிய திருத்தொண்டர்களின் உண்மை வரலாறுகள், திருக்குறள், தேவாரம் முதலிய திருமுறைகள் போன்ற தமிழ் நூல்கள் ஆகியவற்றை முதன்மை மேற்கோள் களாகக் காட்டுகின்றன. பிரமாணம், இலக்கணம், சாதனம், பயன் என்னும் நான்கனுள் பின்னைய இரண்டுமே இந்நூல் களில் கூறப்பெற்றுள்ளன. இவ்விடத்தில், உளங் கொள்ளத்தக்க இன்னொரு முக்கிய செய்தியும் உண்டு. திருஞானசம்பந்தர், திருநாவுக்கர சர், சுந்தரமூர்த்தி, மணிவாசகப்பெருமான் என்ற சமயகுரவர் நால்வருக்குப் பின் சைவ சமயத்தைத் தழைத்தோங்கச் செய் வதற்குத் தமிழ் நாட்டில் பல ஞானசந்தானங்கள் தோன்றின. பழமையாகவே திருமூலர் மரபு என்ற ஒரு சந்தானம் பேசப் பெறுகின்றது. தாயுமான அடிகளும் தமது குருநாதராகிய மெளன குருவை மூலன் மரபில் வருபவராகவே கொண் டிருத்தல் ஈண்டு நினைக்கத்தக்கது. இதுபோல் திருவியலூர் உய்ய வந்த சந்தானம் என்பதாக ஒரு சந்தானம் இருந்ததை 'உந்தியும் களிறும் என்பவற்றால் அறிய முடிகின்றது. (3) சிவஞான போதம்: இந்த நூலை அருளிச் செய்த வர் திருப்பெண்ணாகடத்தில் தோன்றித் திருவெண்ணெய் 4. தாயுமான அடிகள் - மெளனகுரு வணக்கம் காண்க.