பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவங்கள் - 3 (பாசம்) 201 தொடங்கடையின் அடையாதே தோன்று மாதி" என்பது சிவப்பிரகாசம். எடுத்துக்காட்டொன்று இதனைத் தெளிவாக்கும். உழவன் ஒருவன் பனை விதையை நடுகின் றான்; பின்னர் வாழைக்கன்றை நடுகின்றான்; அதன் பின்னர்க் கரும்பை நடுகின்றான். அதன்பின்னர் கீரையை விதைக்கின் றான். இங்கு அவன் விதைத்த முறைப்படி பயன்தரும் என்று கருதுதல் தவறு என்பதை நாம் அறிகின்றோம். விதைகள் முன்பின்னாகப் பயனைத் தருதலுக்கு இந்த எடுத்துக்காட்டால் விளக்குவர் சிவப்பிரகாச ஆசிரியர். - இறைவன் கருணை உயிர்களால் இயற்றப்பெறும் வினைகள் தம் பயனைத் தாமே சென்று உயிர்கட்குத் தரும் எனச் சமணரும் மீமாம்சகரும் கூறுவர். அவருள் மீமாம்சகர் கருமமே பிரம்மம் எனக் கூறுதலால் கர்மப் பிரம்மாவாதி கள் எனப்படுவர். தாருகவனத்து முனிவர்கள் இக்கொள்கை யுடையவராய் இருந்தமைபற்றியே சிவபெருமான் அவர்கள் முன் பிட்சாடன மூர்த்தியாய்ச் சென்று அவர்களைத் திருந்தச் செய்தார் என்று புராணம் கூறும். உயிர்களால் இயற்றப்படும் வினை அறிவுடையதன்று; அஃது அறிவில்லாத சடம். ஆதலின் அதனால் தன்னைச் சார்ந்தவனைச் சென்று பற்ற இயலாது. அஃது எங்கோ ஓரிடத்தில் என்றோ ஒரு காலத்தில் ஏதோ ஓர் உடம்பு கொண்டு செய்யப்படுகின்றது. செய்யப்பெற்ற செயல் அப்பொழுது நிகழ்ந்து அழிந்து விடுகின்றது. ஆதலால் அது பின்னர் என்றாவது, எங்காவது, எந்த உடம்பிலாவது, பயன்தர இயலாது. அதனால் இறைவனே அவரவர் செய்யும் வினையை நடுவணாய் நின்று அவ்வவ்வினைக்குரிய பயனை உரிய காலத்தில் உரிய இடத்தில் உரிய உடம்பில் கூட்டுவிப் 48. சிவப்பிரகாசம்-29