பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 சைவசித்தாந்தம் - ஓர் அறிமுகம் பான். இதற்குக் காரணம் இறைவன் அவர் வினையைச் செய்வதும் ஆருயிர்கள் மீதுள்ள அளவற்ற கருணையே யாகும் என்பது அறியப்பெறும். சித்தாந்த முறையில் விளக்கம்: இதனைச் சித்தாந்த முறையில் மேலும் தெளிவாக்க முயலலாம். உயிர்கட்கு வினைப்பயனை ஊட்டுவித்தற்குக் காரணம் அவற்றைப் பிணித்துள்ள ஆணவமலத்தைப் போக்குதல் வேண்டும் என்னும் திருவுள்ளக் கருத்தேயாகும். 'உயிர்கள் எல்லாவற்றிற் கும் இறைவனே முதல்வன்' என்பதை மறந்து எல்லாவற்றிற் கும் தாங்களே முதல்வர் என்று எண்ணும் செருக்கினால் செய்யப்பெறம் செயல்களே வினை எனப்படுவன என்பதை யும், இம்மறதியும் செருக்கும் ஆணவமல மறைப்பினால் வருவன என்பதையும் முன்னர்ப் பல இடங்களில் குறிப்பிடப் பட்டதை நினைவுகூரலாம். வினையை உயிர்கள் தவறாமல் அநுபவிக்க அநுபவிக்க அவை தம் அறியாமை நீங்கி இறைவனை அறியும் அறிவைப் பெறும். இறைவன் வினைப் பயனை ஊட்டுவித்தல் மருத்துவர் நோயாளிக்கு மருந்து கொடுத்தல் போன்றது. ஆணவமலம் உயிர்கட்கு உள்ள நோய் ஆகும். அதற்கு மருந்தாய் உள்ளவை வினைப்பயன்கள்; மருந்துகளில் சில இனிக்கும்; சில கசக்கும். நல்வினைப் பயனாகிய இன்பம் இனிப்பான மருந்தை உண்பது போன்றது; தீவினைப் பயனாகிய துன்பம் கசப்பான மருந்தை உண்பது போன்றது. இன்னும் சில வேளைகளில் அறுத்துக் கீறிச் சுட்டுச் செய்யும் சிகிச்சைகளும் நிகழும் சந்தர்ப்பங்களும் ஏற்படு கின்றன அல்லவா? இங்ங்னமே மிகப்பெரிய துன்பங்களையும் மிகப் பெரிய பயனாக இறைவன் ஊட்டுவிப்பான். ஆருயிர்கள் இவற்றைத் தாங்கிக் கொள்ளத்தான் வேண்டும். இது கருதியே வள்ளுவர் இடுக்கண் வருங்கால் நகுக' என்று கூறிப் குறள்.621 (இடுக்கண் அழியாமை)