பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவங்கள் - 3 (பாசம்) 203 போந்தாரோ என்று நினைக்கவும் தோன்றுகின்றது. சுருங்கக் கூறின், ஆருயிர்களின்மீது எல்லையற்ற கருணையுடைய இறைவன் ஆணவத்தின் ஆற்றல் கெடுதற்பொருட்டே வினையின் பயனை ஊட்டுவிக்கின்றான் என்பது சித்தாந்த உண்மை. நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால் அல்லற் படுவ தெவன்?" என்ற குறள் நமக்கு சிந்தனை விருந்தாக அமையட்டும். ஒருபிறப்பில் செய்த வினைமுழுவதையும் அடுத்த பிறப்பில் அநுபவித்து விடுதல் இல்லை. ஒவ்வொரு பிறவியி லும் பிராரத்தமாய் அநுபவிக்கும் வினை குறைவு ஆகாமிய மாய் செய்யப்பெறும் வினை மிகுதி. இங்ங்னம் பிறவிதோறும் அநுபவிக்கப்பெறாமல் சஞ்சிதமாய்க் கிடக்கும். வினைத் தொகுதியை நினைத்துப் பார்க்கலாம். அது பேரளவில் தேங்கிக்கிடப்பது புலனாகும். ஆகவே, பிராரத்தமாய்க் கழியும்பொழுது அதன் அழிவில் ஆகாமியம் தோன்றிவிடும் என்பது தெளிவாகின்றது. அஃதாவது ஒருவினை நசிக்கும் பொழுதே பலவினைகள் உற்பத்தியாகி விடுகின்றன என்பது தெளிவு. இக்காரணத்தால் காரிய கன்மம் நாசோற்பத்தி' உடையது என்று கூறப்பெறும். நாசோற்பத்தி’ என்பது ஒருவினை நாசமாகும்போது வேறு வினைகள் தோன்றுதல். இன்னும் காரியகன்மம் நீரோட்டம்போல் இடையறாது வருதலின் அது பிரவாக நித்தம் என்றும் வழங்கப் பெறும். வினை நாசத்தில் உற்பத்தியாகித் தொடர்ந்து வருதலை அருணந்தி சிவம், 50. மேலது. 379 (ஊழ்)