பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 சைவசித்தாந்தம் - ஓர் அறிமுகம் பெருந்துறையில் மேய பெருங்கருணை யாளன் வருந்துயரம் தீர்க்கும் மருந்து.' (முன்னைவினை இரண்டு-சஞ்சிதம், பிராரத்தம்; முன்னின்றான்-குருவாக நின்றவன் வருந்துயரம்ஆகாமிய வினையாகிய துன்பம்) என்று கூறியதனால் தெளியலாம். ஒருவர் பிறரது தீவினைப் பயனை ஏற்றுக் கொள்ள விரும்பினும், தாம் செய்த நல்வினைப் பயனைப் பிறருக்குத் தரவிரும்பினும் இறைவனது ஆணை அதனை முற்றுவிக்கும் என்பது அறியப்படும். ஒரு முக்கியக்கருத்து: இறுதியாக வினைபற்றி ஒரு முக்கியமான கருத்தினை அறிவோம். உயிர்கட்கு வினைக் கீடான உடம்பு கொடுக்கப்படும் என்பதில் உடம்பு’ என்பது பருஉடம்பையே (துலதேகம்) குறிக்கும். பருஉடம்பு கண்ணுக் குப் புலனாவது. இந்த உடம்பில்தான் மக்கள், விலங்கு, பறவை, தாவரம் முதலிய வேறுபாடுகள் உள்ளன. இப்பருவுடம்பிற்கு வேறாய் நுண்ணுடம்பு (சூக்குமதேகம்) ஒன்று உண்டு. அது கண்ணுக்குப் புலனாகாது. இதன்கண் அவ்வேறுபாடுகள் இல்லை. ஆகவே, வினைக்கேற்ப உயர்ந்ததும் தாழ்ந்ததுமாகக் கொடுக்கப்பெறும் உடம்புகள் என்பன பருவுடம்புகளேயாகும் என்பது அறியப்படும். ஆணவ மலத்தால் கட்டுண்டு கேவல நிலையில் கிடக்கும் ஆன்மாக்கட்கு இறைவன் முதற்கண் நுண்ணுடம்பையே கூட்டுவிப்பான். இதில் உயர்வு தாழ்வு இல்லை. நுண்ணுடம் பினால் சிறிது அறிவும் இச்சையும் செயலும் விளங்கப்பெற்று ஆன்மாக்கள் தத்தம் தகுதி நிலைகட்கேற்ப நல்லனவும் தீயனவுமான வற்றை அளித்தும் இச்சித்தும் செய்ய முயலும். இம்முயற்சியே அவற்றிற்கு வினையாய் அமையும். 52. திருவா. திருவெண்பா-4