பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 சைவசித்தாந்தம் ஓர் அறிமுகம் (6) மாயா மலம் ஆணவம், கன்மம் என்பவற்றின் பின் சொல்லபபடும் மலம் மாயை என்பது. பானைக்கு மண்போல உலகத்திற்கு மூலகாரணம் மாயை - மாயா மலம். ஆதலின் உலகில் காணப்படும் பொருள்கள் யாவும் இதன் காரியமேயாகும். இக்காரியங்கள் பலவற்றையும் சைவசித்தாந்தம் தனு, கரணம், புவனம், போகம் என்று நான்காக வகுத்துப் பேசும். தனு என்பது பருவுடம்பு கரணம் என்பது அந்தக்கரணம்; மனம் முதலிய உட்கருவிகள்; புவனம் என்பது அவ்வுடம்புகள் இயங்குவதற்கு அமைந்த இடம். போகம் என்பது, உயிர்கள் தனுகரணங்களைக் கொண்டு இன்ப துன்பங்களை நுகரும் நுகர்ச்சிப் பொருள்கள். தாத்துவிகங்கள்: மாயை அதிசூக்குமப் பொருள். ஆதலின் தனு கரண புவன போகங்களாகிய அதிதுலப் பொருள்கள் நேரே அதன் காரணமாக வரமாட்டா. ஆதலால் தத்துவங்கள்’ எனப்படும் முதல்களே (மூலப்பொருள்களே) முதற்கண் மாயையினின்று தோன்றும்; பின்பு, அத்தத்துவங் களினின்றும் அவற்றின் காரியமாக தனு கரணபுவனபோகங் கள் தோன்றும் அஃதாவது உலகம் தோன்றும். பின்பு அத் தத்துவங்களினின்றும் தோன்றுவனவற்றைத் தாத்துவிகம் என்று வழங்குவர். தத்துவங்களினின்றும் உலகம் தோன்றுத லால் உலகத்திற்கு நேரே முதற்காரணமாக இருப்பவை தத்துவங்களேயாகும். தத்துவங்கள் மாயையின் காரியங்களாத லின், உலகத்திற்கு முடிவான முதற்காரணம் மாயையாகும் என்பது உளங்கொள்ளப்படும். 5 தத்துவம் என்பதற்குப் பிறமதங்களில் பொருள் என்பதே கருத்து. சைவ சித்தாந்தத்துள் தத்துவம் என்பதற்குக் ‘கருவி என்பதுதான் பொருள். - -