பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240 சைவசித்தாந்தம் - ஓர் அறிமுகம் அசுத்தமாய் இருந்து மயக்கத்தைத் தருவதற்கும் உயிர்களைப் பிணித்திருக்கும் ஆணவமலத்தின் வன்மை மென்மைகளே காரணம் என்பது தெளிவு. மாயைக்கு இயல்பாய் உள்ள தன்மை விளக்கத்தைத் தருவதாகும். ஆயினும், அது மயக்கத்தைத் தருவது ஆணவத்தின் சார்பினாலாகும் என்பது தெளிவு. இது வெயிலில் வைக்கப்பெற்றிருக்கும் கரும்புச்சாறு புளிப்பை அடைவது போலாகும். இனிப்பையுடைய பால் புளிப்பையுடைய தயிராகி விடுதல் போல்வதாகும் என்றும் சொல்லலாம். பிணிப்பதால் விளைவுகள்: விஞ்ஞானகலர் என் னும் ஒரு மலம் உடையவர்களை ஆணவம் மென்மையாகப் பிணித்திருத்தலால் அவர்களை அடைகின்ற மாயை அசுத்த மாய் மயக்கத்தைச் செய்யாது; சுத்தமாகவே இருக்கும். ‘பிரளயாகலர்' என்னும் இருமலம் உடையவர்களை ஆணவம் இடைநிலையாகப் பற்றியிருத்தலால், அவர்களை அடைகின்ற மாயை சிறிதளவு அசுத்தமாகி சிறிதளவு மயக்கத்தைச் செய்யும். சகலர்' என்னும் மும்மலம் உடையவர்களை ஆணவம் வன்மையாகப் பற்றியிருத்தலால், அவர்களை அடைகின்ற மாயை அசுத்தமாகி மயக்கத்தைச் செய்யும். எனவே, ஒன்றேயாகிய மாயை ஆணவ மலத்தின் வேறுபாட்டினால் சுத்தம், மிச்சிரம், அசுத்தம் என மூன்றாகி விடுகின்றது என்பதை உணரலாம். இக்கூறியவற்றால் சுத்தப் பிரபஞ்சம் விஞ்ஞானகலர்க்கு உரியது என்பதும், அசுத்தப் பிரபஞ்சம் சகலர்க்கு உரியது என்பதும் மிச்சிரப் பிரபஞ்சம் பிரளயாகலர்க்கு உரியது என்பதும் அறியத்தக்கவை. மேலும் தெளிவாக்கம்: இங்குக் கூறியவற்றை மேலும் தெளிவாக்கலாம். ஒருமலம் உடையவர், இருமலம் உடையவர், மும்மலம் உடையவர் என்றெல்லாம் சொல்வது மேற்குறிப்