பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவங்கள் -3 (பாசம்) 2 பிட்ட மயக்கம் இன்மையும் மயக்கம் உண்மையும் பற்றியே யாகும். அதாவது விஞ்ஞானகலர்க்கு ஆணவப் பிணிப்பு மென்மையாயிருப்பதால் அவர்களுக்குரிய கருவிகரணங்கள் மயக்கத்தை விளைவிப்பதில்லை. ஆகவே, அவற்றைக் கொண்டு ஈட்டியும் நுகர்ந்தும் வரும் வினைகளும் மயக்கத் தைச் செய்யா. இதுபற்றியே அவர்கட்கு மாயைக் கன்மங்கள் இல்லை என ஆகமங்கள் கூறுகின்றனவேயன்றிச் சுத்த மாயையும் சுத்த கன்மமும் இல்லை என்னும் கருத்தினாலன்று. இன்னும் விஞ்ஞானகலர் பிரளயகலர்கட்கு மயக்கம் இல்லை என்பதற்குச் சகலர்க்கு உள்ள மயக்கம் போன்ற மயக்கம் இல்லை என்பதே கருத்தாகும். ஆணவப்பிணிபபு சிறிதேனும் உள்ளவரையில் மயக்கம் சிறிதாயினும் உளதாகுமேயன்றி அறவே நீங்காது. நீங்குமெனின் விஞ்ஞான கலராகும் நிலையே முத்தி நிலையாய் விடும். அது பொருந்தா மையால், விஞ்ஞானகலர்க்கு மாயை, கன்மங்கள் இல்லை என்பதற்குப் பொருள் அசுத்த மாயையும் அசுத்த கன்மமும் இல்லை எனபதாகும். இஃது இனிது விளங்குதற்பொருட்டே சுத்த மாயையை மாயை' என்று குறியாது விந்து என்றே குறித்தல் பெரும்பான்மை வழக்கமாய் உள்ளது. இங்ங்னமே சுத்த மாயையும் அடைமொழியின்றி மாயை' என்றே குறித்துச் சொல்லுதல் பெரும்பான்மை வழக்காய் உள்ளது. சுத்த மாயை அசுத்த மாயை என்ற இரண்டையும் இரண்டு தனிப் பொருள்களாகக் கூறுதலும் இதுபற்றியேயாகும். பிரளயாகலர்க்கு மாயை இல்லை என்பதற்கும் இவ்வாறு அசுத்த மாயை இல்லை என்பதே பொருளாகும். இக் கூறியவற்றால் சகலர்க்கு உரிய பிரகிருதி மான்யயே உண்மையில் அசுத்த மாயையாகின்றது. ஆயினும் அஃது இயற்கையில் அவ்வாறு அமையாது. மிச்சிரமாயையின் பரிணாமமாய் அமைவதால் அது தனித்து ஒரு மாயையாகக்