பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவசித்தாந்தம் - ஓர் அறிமுகம் கூறப்பெறாமல் பிரகிருதி’ என்னும் ஒருதத்துவமாகக் கூறப் பெறுகின்றது. ஆகவே, அசுத்தமாயை' எனக்குறியிட்டு வழங்கப்பெறும் மாயை உண்மையில் மிச்சிரமாயையே என்பது அறிந்து தெளியப்படும். மும்மலமுடைய சகலர்க்கும் சுத்தமாயா தத்துவத்தோடு தொடர்பு இல்லை. ஆயினும் மிச்சிரமாயா தத்துவத்தோடு தொடர்பு உண்டு. இதுபற்றியும் மிச்சிரமாயை அசுத்தமாயை' எனவும் வழங்கப் பெறுகின்றது. ஓர் உண்மை: சுத்தமாய் உள்ள பொருள் அசுத்தமாகு மாயின் அது தனது வியாபகத்தை" இழக்கும். காரணம் அசுத்தமானது ஆணவத்தின் தொடர்பாகும். ஆணவத்தின் தன்மை அணுத்தன்மை உடையதாகச் செய்வது என்பதை நாம் அறிவோம். அதனால் ஆணவத்தைச் சார்ந்த பொருள் தனது வியாபகத்தை இழப்பதாகின்றது. இதனால் சுத்த மாயை வியாபகமும், அசுத்த மாயை வியாப்பியமும்’ ஆகின்றன. இக்காரணத்தால் சுத்தமாயை ஊர்த்துவமாயை' " என்றும், அசுத்தமாயை அதோமாயை' என்றும் வழங்கப்பெறுகின் றன. மேல், கீழ் என்பன ஈண்டு வியாபக வியாப்பியங்களைக் குறிக்கும் என்பது நன்கு உணர்ந்து தெளியப்படும். மற்றும், ஊர்த்துவமாயை, மகா மாயை, குடிலை, விந்து என்பன சுத்தமாயையின் வேறு பெயர்கள். அதோமாயை, மாயை, மோகினி' என்பன அசுத்தமாயையின் வேறு பெயர் கள். 'மான், அவ்யக்தம் என்பன பிரகிருதிமாயையின் வேறு பெயர்கள். இங்ங்ணம் மும்மாயைகளும் தெளிவாக விளக்கப் பெற்றன. 54 வியாபகம்-விரிவு 55. வியாப்பியம்-அடக்கம் 56. ஊர்த்துவம்.மேல் 57. அதோ-கீழ்.