பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவங்கள் - 3 (பாசம்) 215 புழுவாதல் ஏகதேசப் பரிணாமம்’. சைவசித்தாந்தம் அசுத்த மாயைக்குக் கூறும் பரிணாமம் ஏகதேசப் பரிணாமம் ஆகும். இருவகை உலகங்கள்: உலகம் சொல் உலகம், பொருள் உலகம் என இருவகையாய் உள்ளது. சொல் உலகத்தை சத்தப்பிரபஞ்சம் என்றும், பொருள் உலகத்தை ‘அர்த்தப் பிரபஞ்சம்’ என்றும் கூறுவர். இவற்றுள் சொல் உலகம் எழுத்துகளை உறுப்பாகக் கொண்ட சொற்களும் சொற்றொடர்களுமாகும். எழுத்துகள் வன்னம்’ (வர்ணம்) என்றும், சொற்கள் பதம் என்றும், வடமொழிப் பெயர்களைப் பெறும்.சொற் றொடர்களில் சிறப்புடையன மந்திரங்களாகும். அதனால் மந்திரம், பதம், வன்னம் என்று சத்தப் பிரபஞ்சத்தை மூவகைப்படுத்திப் பேசுவர். வடமொழி ம்ரபும் சைவமரபும் பற்றி வன்னம் ஐம்பத்தொன்று என்றும், பதம் எண்பத்தொன்று என்றும், மந்திரம் பதினொன்றென்றும் சிவாகமங்கள் வரையறை செய்கின்றன. இவண் கூறப்பெற்ற எழுத்து, சொல், சொற்றொடர்கள் எல்லா மொழிகளிலுமுள்ள எழுத்துகளும் சொற்களும் நூல்களும் அடங்கும் என்பது சிவாகமங்களின் கொள்கையாகும். சத்தப்பிரபஞ்சம் அறிவுக்குக் காரணமாய் நிற்றலின் அது சுத்தமாயையின் காரியமாகும். ஆகவே, சுத்தமாயையின் காரியமே சொற்பிரபஞ்சம், பொருட்பிரபஞ்சம் என்று இருவகை யாகின்றது என்பது அறியப்படும். அசுத்தமாயை யின் காரியங்களும் பிரகிருதி மாயையின் காரியங்களும் பொருட்பிரபஞ்சம் என்ற ஒன்றேயாதல் என்பதும் அறிந்து தெளியப்படும்.