பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 சைவசித்தாந்தம் - ஓர் அறிமுகம் (8) சுத்த மாயையின் தத்துவங்கள் சுத்தம், அசுத்தம், பிரகிருதி என்ற மும்மாயைகளில் மிக நுண்ணியதாய் உள்ளது சுத்தமாயை. இதிலிருந்து சொற் பிரபஞ்சமும், பொருட்பிரபஞ்சமும் தோன்றுகின்றன. . () சொல் உலகம் சொல் உலகம் வாக்கு எனப்படும். சொல் என்பது இங்கு நாம் காதினால் கேட்கும் ஓசையையன்று அவ்வோசை யின் வழியே எழுந்து நமக்குப் பொருளுணர்வை உண்டாக்கு கின்ற ஆற்றலே என்பதாகும். சொற்கள் பொருளைப் பற்றுக் கோடாகக் கொண்டே நிகழும், இங்கு தோன்றும் வாக்குகள் நால்வகையாகும். அவை குக்குமை, பைசந்தி, மத்திமை, வைகரி என்பனவாகும். இவை நான்கும் ஒன்றில் ஒன்று துலமாய் வளர்ச்சியுற்று நிற்கும். எனவே, சூக்குமை முதலாகக் கூறுதல் தோற்றமுறையாகும். ஒழுக்கமுறையில் கூறின் வைகரி முதலாக அமையும். இனி, ஒவ்வொன்றையும் பற்றி விளக்குவோம். - (அ) சூக்குமை வாக்கு சுத்தமாயையின் முதல் விருத்தியாய் முதற்கண் நிற்பது. இதற்கும் இதன் காரண நிலைக்கும் வேறுபாடு மிகுதியாக இல்லை. காரணநிலையி லுள்ள சுத்தமாயை ஏனைய மூவகை வாக்குகளாய் விருத்திப் படுவதற்குத் தகுதி பெற்று நிற்கும் நிலையே சூக்குமை வாக்காகும். இது 'பரை' என்றும் நாதம் என்றும் சொல்லப்படும். இதற்குப் பற்றுக் கோடாதல் பற்றியே சிவதத்துவத்திற்கு நாதம்' என்பது பெயராயிற்று. இது காரணநிலையிலேயே நிற்பதால் அழிவின்றி நிற்பதாகவும் சொல்லப்படும்.