பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 சைவசித்தாந்தம் - ஓர் அறிமுகம் என்னும் உறுப்புகளில் பட்டுச் சிதறிப் போவதால் வைகரி எனப்பட்டது. வைகரி -விகாரம் உடையது. விகாரம் என்பது எழுத்துகளின் தோற்றக் கேடுகள். மத்திமை, வைகரி என்ற இருவகை வாக்குகளும் மொழி வேறுபாடுகளை உடையன. இங்ங்ணம் சுத்தமாயை ஒன்றே நால்வகை வாக்குகளாய் விருத்தி பற்றி நிற்கும் என்பது அறியப்படும். இந்த நால்வகை வாக்குகளாலே யாதோர் உயிர்க்கும் சவிகற்பஞானம்' (சிறப்புணர்வு உண்டாகும். இவை இல்லை யேல் நிருவிகற்ப ஞானம்' (பொதுவுணர்வு) உண்டாகுமே யன்றி சவிகற்ப ஞானம் உண்டாக மாட்டாது. இந்த வாக்குக ளின்றிப் பொருள்களை உணரும் ஆற்றல் எவர்க்கேனும் என்றாவது உளதாகுமாயின் அவர் அன்றே பாசத்தில் நீங்கிய முத்தராவார். இதனால் எல்லா உயிர்கட்கும் சவிகற்பஞானம் உண்டாவதற்கு இவ்வாக்குகள் இன்றியமையாது வேண்டப் படும் என்பது தெளிவாகும். இங்ங்னம் தெளிவாகவே இவ்வாக்குகள் விஞ்ஞானகலர் பிரளயாகலர், சகலர் என் மூவகைப்பட்ட ஆன்ம வர்க்கத்தினர்க்கும் முறையே ஒருவரைவிட மற்றவர்க்குத் துல நிலையைப் பெற்றுப் பயன் தரும் என்பது புலனாதல் அறியப்படும். - - மூவகை அணுக்க ளுக்கும் முறைமையின் விந்து ஞானம் மேவின தில்லை யாகில் விளங்கிய ஞானம் இன்றாம் என்றும், ஒவிட விந்து ஞானம் உதிப்பதோர் ஞானம் உண்டேல் சேவுயர் கொடியி னான்றான் சேவடி சேர லாமே" 58. சவிகற்ப ஞானமாவது, ஒரு பொருளைப்பற்றி அதன் கூறுபாடுகள் பலவற்றையும் உணரும் உணர்வு. - 59. நிருவிகற்ப ஞானமாவது, பொருளின் கூறுபாடுகளின்றி "இஃது ஒரு பொருள் என்ற அளவில் உணர்வது. 60. சித்தியார். 1-25