பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவங்கள்-3 (பாசம்) 219 என்று விளக்குவர் அருணந்தி சிவம். இதுகாறும் கூறியவற்றால் உயிர்களைப் பிணித்திருக்கும் பலவகைப் பிணிப்புகளில் வாக்குகளே நீக்குதற்கரிய பெரும் பிணிப்பாகும் என்பதும், இப்பிணிப்பு நீங்கின் ஏனைய பிணிப்புகள் பலவும் தாமே நீங்கி வீட்டு நிலை கைவரப் பெறும் என்பதும் ஈண்டு உளங்கொள்ளத் தக்கவை. (ii) பொருள் உலகம்: சுத்தமாயையில் தோன்றும் பொருட்பிரபஞ்சங்கள் ஐந்து சிவதத்துவங்களாகும். அவை சிவம், சத்தி, சதாசிவம், ஈசுரம், சுத்த வித்தை என்பனவாகும். இவை ஐந்தும் தன் தொழில்களால் உலகத்தைச் செயற்படுத்தக் கருதும் பிறவா யாக்கைப்பெரியோனுக்கு (இறைவனுக்கு இடமாதல் பற்றி 'சிவதத்துவங்கள் என வழங்கப்பெறுகின்றன. ஆயினும் வினைவயத்தால் பிறந்து இறக்கும் உயிர்களுக்குத் தனுகரண, புவன, போகங்களாய் வந்து பொருந்தா என்பது உளங்கொள்ளப்படும். இந்த ஐந்து தத்துவங்களையும் ஒவ்வொன்றாக விளக்குவோம். (அ) சிவம்: உலகத்தைத் தொழிற்படுத்தக் கருதுங்கால் எல்லாம்வல்ல இறைவனுக்கு அவனது இச்சை, ஞானம், கிரியை (விழைவு, அறிவு செயல்) என்னும் மூன்று சக்திகளுள் இச்சை எஞ்ஞான்றும் ஒரே நிலையில் நிற்கும். ஏனைய ஞானமும் கிரியையும் தனித்தும் ஒன்றின் ஒன்றும் மிகுந்தும், குறைந்தும் சமமாயும் நின்றும் தொழில்படும். அவ்விடத்து இறைவன் முதற்கண் ஞானசக்தி ஒன்றாலே சுத்தமாயையைப் பொதுமையில் நோக்கி சிவன் எனப்பெயர் பெற்று நிற்பான். அவனால் நோக்கப் பெற்ற அந்நிலையில் சுத்தமாயை முதல் விருத்தியாய் அவனுக்கு இடமாகும். ஆகவே, அவனுக்கு