பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 சைவசித்தாந்தம் ஓர் அறிமுகம் இடமாதல் பற்றி, அம்முதல் விருத்தியே 'சிவம் என்னும் பெயருடைய தத்துவமாய் நிற்கும். மேலே குறிப்பிட்ட நால்வகை வாக்குகளில் சூக்குமை வாக்காகிய நாதத்திற்குப் பற்றுக் கோடாதல்பற்றி இத்தத்துவம் நாதம் என்னும் திருப் பெயரையும் பெற்று நிற்கும் என்பது உளங்கொள்ளப்பெறும். (ஆ) சத்தி: ஞான சக்தியில் முதற்கண் சுத்தமாயையைப் பொதுமையில் நோக்கிய இறைவன், கிரியா சத்தி ஒன்றா லேயே சுத்தமாயையைக் காரியப்படுத்தப் பொதுவகையில் சங்கரித்து ‘சத்தி எனப்பெயர் பெற்று நிற்பன். இந்நிலையில் சுத்தமாயை இரண்டாம் விருத்திப்பட்டு அவனுக்கு இடமாகும். சத்திக்கு இடமாதல் பற்றி இவ்விரண்டாம் விருத்தியே சத்தி என்னும் திருப்பெயரையுடைய தத்துவமாய் நிற்கும். பைசந்தி 'விந்து எனவும் பெயர் பெறுமாதலின், அதற்குப் பற்றுக் கோடாகவுள்ள இத்தத்துவமும் விந்து எனப் பெயர் பெற்று நிற்கும். - - - (இ) சதாசிவம்: ஞான சக்தியால் பொதுமையில் நோக்கி கிரியா சத்தியால் பொதுமையில் சங்கற்பித்த இறைவன், பின் அவ்விரண்டினாலும் சுத்தமாயையைச் சிறப்பு வகையால் நோக்கிச் சிறப்பு வகையால் சங்கற்பித்து ஞானசக்தியும் கிரியா சத்தியும் சமமாய்த் தொழிற்பட சதாசிவன் எனப் பெயர் பெற்று நிற்பான். இந்நிலையில் சுத்தமாயை மூன்றாம் விருத்திப்பட்டு அவனுக்கு இடமாகும். சதாசிவனுக்கு இடமாதல் பற்றி இம்மூன்றாம் விருத்தி சதாசிவம் என்னும் பெயருடைய தத்துவமாய் நிற்கும். நால்வகை வாக்குகளில் இது மத்திமை வாக்கிற்குப் பற்றுக் கோடாய் அமைகின்றது. ஆகவே, இறைவன் வேதாகமங்களைச் சொல் வடிவில் தோற்றுவிக்கும் நிலை இதுவேயாகும். இத்தத்துவம் “சாதாக்கியம் என்றும் வழங்கப்பெறும். .