பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 சைவசித்தாந்தம் - ஓர் அறிமுகம் எனப்பெயர்பெறுகின்றான். இவண் குறிப்பிட்ட ஐந்து நிலை களில் சிவன், சக்தி என்னும் இருநிலைகளில் இறைவன் அருவமாய் இருப்பான். சதாசிவன் என்னும் நிலையில் அருவுருவமாய் இருப்பான். மகேசுவரன் வித்தியேசுவரன் என்னும் நிலைகளில் உருவமாய் அமைவான். இதனால்தான் உமாமகேசுவரர். சோமாஸ்கந்தர், கலியாண சுந்தரர், பிட்சாடனர் முதலிய உருவத்திருமேனிகள் எல்லாம் மகேசுர மூர்த்தங்கள் என வழங்கப்பெறுகின்றன. இவையும் உளங் கொள்ளப்பெறும். அறிந்துகொள்ள வேண்டிய மேலும் சில செய்திகள்: 'சத்தி, சிவம் என்னும் அருவநிலை ஒடுக்க நிலை ஆதலின், அவை இலய நிலை (லயம்-ஒடுக்கம்) எனப்படும். சதாசிவ னாகிய அருவுருவநிலை ஒன்றும் ஐந்தொழில் புகும் நிலையாத லின் அது போக நிலை என வழங்கப்பெறும். மகேசுரன், வித்தியேசுரன் என்னும் உருவநிலை இரண்டும் ஐந்தொழிலை நடத்தும் நிலையாதலின், அவை ‘அதிகார நிலை என்று சொல்லப்பெறும். இதனால் இலயசிவன். போக சிவன், அதிகார சிவன் என தடத்த சிவனது நிலை மூன்றாகின்றது. இது காரணமாகவே சுத்ததத்துவங்களும் இலய தத்துவம், போக தத்துவம், அதிகார தத்துவம் என மூவகையினவாகின் றன. இங்ங்னம் தடத்த சிவனது நிலைகளை அறிந்து தெளிய (3üffLf). இவண் கூறப்பெற்ற சுத்த தத்துவங்கள் தடத்த சிவனுக்கு இடமாதலோடு அத்தத்துவங்களில் நிற்கும் ஆன்மாக்களுக்குத் தனு கரண புவன போகங்களையும் தந்து நிற்கும் ஒரு மலம் உடைய விஞ்ஞானகலர் தகுதியைப் பெறுகின்றனர். இருமலம் உடைய பிரளயாகலரும், மும்மலம் உடைய சகலரும் இருவினையொப்பு, மலபரிபாகம், சத்தி நிபாதம்