பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவங்கள் - 3 (பாசம்) 223 கைவரப்பெற்று இறைவனால் முன்னின்றும் படர்க்கையில் நின்றும் சிவஞானம் அருளப்பெற்று மலம்நீங்கி மலவாசனை மட்டும் உளராய் இருக்கும் நிலையில் சுத்த தத்துவத்தை, அடையும் தகுதி பெறுகின்றனர். அங்குள்ள தனு கரண புவன போகங்களையும் நுகர்கின்றனர். மலம் நீங்கினோர் முத்தர் ஆவர். இவர்களுள் மலவாசனையுடையோர், அதிகார மலவாசனை, போக மலவாசனை, இலயமலவாசனை உடையவராயிருப்பர். அதிகாரமலம், போக மலம், இலய மலம் என்பவை ஒன்றை விட மற்றொன்று சூக்குமமானது. ஆதலின் அவை நீங்கும் பொழுது அம்முறையிலேயே நீங்கும். இவருள் அதிகார மலத்துள் தூல அதிகார மலவாசனையுடையோர், இறைவன் வித்தியேசுவரனாய் நிற்கும் சுத்தவித்தையை அடைந்து தாமும் வித்தியேசுவரர் எனப்பெயர் பெற்றுச் சுத்தமாயையைத் தொழிற்படுத்துவர். அவ்வித்தியேசுவரர் எண்மர் என்பது சிவாகம நூல்களின் துணிபு. அவர் அனந்தர், சூட்சுமர், சிவோத்தமர், ஏகநேத்திரர், ஏகருத்திரர், திரிமூர்த்தி, சீகண்டர், சிகண்டி என்பவர்களாவர். இவர்கட்கும் பரிவாரர் களாய் நிற்பவர் பலர். இவர்க்கெல்லாம் இடமாயிருப்பது இச் சுத்தவித்தியாதத்துவம் என்பது அறியப்படும். இனி, சூக்கும் அதிகாரமலவாசனையுடையோர் இறை வன் மகேசுவரன் எனப் பெயர் பெற்று நிற்கும் இடமாகிய ஈசுரதத்துவத்தை அடைந்து, மந்திரமகேசுரர் எனப் பெயர் பெற்று நின்று மகேசுரமூர்த்தி ஆணையின் வழி மந்திரம் முதலியவற்றைத் தொழிற்படுத்தி நிற்பர். இவர்க்குப் பரிவார மாவோரும் பலர் உளர். இவர்க்கெல்லாம் இடமாவது இந்த ஈசுரதத்துவமாகும் என்பது அறியப்பெறும்.