பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவங்கள் - 3 (பாசம்) 225 என்பதே வடிவு' என்று உபசரித்துக் கூறப் பெற்றதாகக் கொள்ள வேண்டும். ஆகவே, இத்தத்துவங்கள். இறைவனுக்கு இடமாதலன்றி வடிவம் ஆகாமை உணரப்படும். இக்கூறிய வற்றால் சிவதத்துவம் தெளிவாக விளக்கப் பெற்றது. (9) அசுத்த மாயையின் தத்துவங்கள் அசுத்த மாயையை இறைவன் தானே நேர் நின்று தொழிற்படுத்தாது சுத்த வித்தையில் நிற்கும் வித்தியேகரர் எண்மருள் முதல்வரான அனந்ததேவர் வழியாகவே தொழிற் படுத்துவன். ஆகவே அசுத்த மாயைக்கு அதிகார மூர்த்தி அனந்த தேவர் என்பது அறியப்படும். இன்னொரு செய்தியையும் ஈண்டு நினைவிற் கொள்ள வேண்டும். ஆணவம் கன்மம் இவற்றோடு கலவாதது சுத்த மாயை. இவ்விரண்டனோடும் கலந்திருப்பது அசுத்தமாயை. கலப்பற்ற சுத்தமாயை நுண்பொருளாய் உள்ளது. கலப்புற்ற அசுத்தமாயை பருப்பொருளாயுள்ளது. இறைவன் நுண்ணி யோன். ஆகவே அவன் நுண்பொருளையே நேரே தொழிற் படுத்துவான்; பருப்பொருளை பிறிதொரு வாயிலாகவே தொழிற்படுத்துவான். இறைவனைத்தவிர ஏனையாவரும் உயிர்வகையினர். இறைவனை நோக்க உயிர்கள் யாவும் பருப்பொருள்கள். அனந்ததேவர் ஒரு மலம் உடைய விஞ்ஞானகலர் எனப்படும் வகையினருள் மலம்நீங்கி ஞானம் பெற்றுத் துல அதிகார மலவாசனை மாத்திரம் உடையவர். அதிகார மலம்' என்பது, இறைவனைப் போலத் த்ாமும் உலகத்திற்கு முதல்வராய் நின்று அதனை இயக்குதல் வேண்டும் என்னும் விருப்பத்திற்குக் காரணமாகிய ஆணவமலத்தின் ஆற்றல். அனந்ததேவர் முதலியோருக்கு அவ்விருப்பம் இருப்பினும், அவர் இறை வனை மறந்து அதிகாரத்தில் மூழ்கிக் கிடவாமையால்,