பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவங்கள் - 3 (பாசம்) 227 இதற்குப் பின்னர் மாயா தத்துவத்தினின்றும் நியதி' என்ற தத்துவம் தோன்றும் இதனை அடுத்து கலை' என்னும் தத்துவம் தோன்றும். மாயை என்னும் தத்துவம் அனந்த தேவரின் இச்சையின் வழி ஒருபகுதி காலமாயும், மற்றொரு பகுதி நியதியாகவும், வேறொருபகுதி கலையாகவும் பரிண மித்து நிற்கும் என்பது ஈண்டு அறியப்படும். இவை மூன்றும் தோன்றிய பின்னரும் மாயை என்னும் தத்துவம் குறையாது நிற்கும். அதன் பின்னர் கலையினின்று வித்தை’ என்னும் தத்துவமும், வித்தையினின்றும் அராகம்’ என்னும் தத்துவ மும் தோன்றும். இத்தத்துவங்கள் அனைத்தும் உயிர்கட்கு உடம்பாய் நின்று பலவகையில் துணைபுரியும். இனி, இத் தத்துவங்கள் ஒவ்வொன்றையும் தனித்தனியே விளக்குவோம். (அ) காலம்: இஃது இறப்பு, நிகழ்வு, எதிர்வு என மூன் றாக நிற்கும். இவற்றுள் இறந்த காலம் ஏனைக் காரணங்களோடு இணைந்து ஆன்மாவின் ஞானம், கிரியை, இச்சை என்பவற்றை வினை, வினைப்பயன்களினின்றும் பிரிக்கும். நிகழ் காலம் அவ்வாற்றான் இம்மூன்றினையும் அவ்விரண்டனோடும் கூட்டும். எதிர்காலம் ஞானம் முதலிய மூன்றினையும் வினை, வினைப் பயன்களை எதிர் நோக்கச் செய்யும். இவண் குறிப்பிட்ட மூவகைக் காலங்களும் தோன்றி நின்று அழியும் ஒவ்வொரு பொருளிலும் வேறுவேறு உள்ளன. எல்லாக் காலங்களும் உயிர்களின் வினைக்கேற்பச் செலுத்தும் இறைவனது சத்தியின் வழி.ே தத்தம் காரியத்தைச் செய்யும். எல்லாச் செயல்கட்கும் காலமே பற்றுக் கோடாகும். காலம் இன்றேல் செயல் இல்லை. காலத்தின் கோலம் என்ற பேச்சு வழக்கினையும் சிந்திக்கலாம். (ஆ) நியதி. அவரவர் செய்த வினையை அவரவரே நுகருமாறு வரம்பு செய்து நிறுத்துவது இத்தத்துவம். அஃதாவது,