பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவங்கள் - 3 (பாசம்) - 22% சக்தியை எழுப்பும். இன்னொரு முக்கிய செய்தியையும் ஈண்டு அறிதல் வேண்டும். கிரியை சக்தியும் ஞான சக்தியு. வேறல்ல வாயினும், கிரியையாய் நிற்கும் கூறு அப்பொழுதே ஞானமாய் நில்லாது, இஃது இச்சைக்கும் பொருந்தும். ஆகவே, இம்மூன்று சக்திகளும் ஒருங்கே வேண்டப்படும்பொழுது, அவற்றை வேறு வேறு கூறுகளாக எழுப்புவதற்கு வேறு வேறு தத்துவம் வேண்டும் என்பது உளங்கொள்ளப்படும். (உ) அராகம்: இது வித்தையினின்று தோன்றுவது. ஆன்மாவின் கிரியை சக்தியைக் கலை என்ற தத்துவமும், ஞானசத்தியை வித்தியாதத்துவமும் முறையே முன்னும் எழுப்ப, எஞ்சி நின்ற இச்சை சக்தியை இறுதிக்கண் நின்று எழுப்பும் தத்துவமாகும் இது. காலதத்துவம் கன்மத்தை அளவுபடுத்தவும், நியதிதத்து வம் கன்மத்தை நியமித்து நிறுத்தவும் முற்பட்டு நிற்கும் என்றும், கலைதத்துவம் ஆன்மாவின் கிரியை சக்தியையும், வித்தியா தத்துவம் ஆன்மாவினது ஞானசக்தியையும், அராக தத்துவம் ஆன்மாவின் இச்சை சக்தியையும் முறையே எழுப்பும் என்றும் முன்னர்க் கூறியவற்றை நினைவிற் கொள்ளலாம். இந்நிலையில் ஆன்மா கன்மத்தை நுகரவும் ஈட்டவும் தகுதி பெற்று நிற்கும். ஆகவே, ஆன்மா கன்மத்தை நுகர்தல் ஈட்டல்கட்குக் காலம், நியதி, கலை, வித்தை, அராகம் என்னும் ஐந்தும் இன்றியமையாதனவாய் ஆன்மாவோடு எப்பொழுதும் நீங்காது சட்டைபோல் ஒன்றாய் ஒட்டியே கிடக்கும். இதனால் இவை ஐந்தும் பஞ்ச கஞ்சுகம் என்ற வழங்கப்பெறும். கஞ்சுகம் - சட்டை (ஊ) புருடன் இங்ங்னம் பஞ்சகஞ்சுகத்தை எய்தில் உயிர் பின் இவற்றிற்குக் கீழ் உள்ள மூலப் பிரகிருதியைப் பற்றிய வழியன்றிப் போகம் நுகர்தல் கூடாமையின் இங்ங்னம்