பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவங்கள் . 3 (பாசம்) - 233 (ஆ) புத்தி: குணதத்துவத்தின் ஒரு கூறில் பின் சாத்துவிக குணம் மிக உடையதாய்ப் புத்தி என்னும் அந்தக் கரணம் பரிணமித்துத் தோன்றும். இஃது ஆன்மா, தான் ஐயுற்று நின்ற ஒன்றை இன்னதே எனத் திட்டமாகத் துணிதற்குக் கருவியாய் நிற்கும். புத்தி தத்துவம் இல்லையேல் ஒரு பொருளை இன்னது எனத் திட்டமாக உணரும் உணர்வ உண்டாகாது. இந்த உணர்வு சவிகற்ப ஞானம்' எனப் பெயர்பெறும், சவிகற்பமாக உணரும் சிறப்புணர்வு புத்தி தத்துவத்தால் உண்டாவதால், அதுவே பின் துணியப்பட்ட அந்தப் பொருள் வடிவாய்த் திரிந்து (பரிணமித்து நிற்கும். இதனால் உயிர் - ஆன்மா - நேரே பற்றி அநுபவிப்பது புத்தி தத்துவத்தையேயன்றிப் புறப்பொருளையன்று. எனவே, புறத் தில் உள்ள பொருள்கள் கண் முதலிய பொருள்கள் வாயி லாகவும், பின் மனத்தின் வாயிலாகவும் புத்தியைத் திரிவு படுத்தி நிற்பனவேயன்றி உயிரால் நேரே அநுபவிக்கப்படுதல் இல்லை. - காரணத்தில் உள்ளது காரியத்திலும் உளதாகும் என்பதை நாம் அறிவோம். எனவே, குணதத்துவத்தினின்றும் தோன்றிய புத்தி தத்துவத்திலும் முக்குணங்களும் உளவாகும். இதனால் அவற்றின் காரியமாகிய கொள்கைகள் பலவும் இப்புத்தியின் கண்ணே தோன்றும். இவை பாவகங்கள் எனப்படும். புத்தியில் தோன்றும் பாவகங்கள் அளவிறந்தன வாயினும் அவற்றை எட்டாகத் தொகுத்துக் கூறுவர் சித்தாந்தி கள். இவற்றுள் கன்மம், ஞானம், வைராக்கியம், ஐகவரியம் (தமிழில் அறம், அறிவு, பற்றின்மை, செல்வம் என்னும் நான்கும் நல்லவையாகும். இவற்றின் மறுதலையாகிய அதன்மம், அஞ்ஞானம், அவைராக்கியம், அவைசுவரி - ஒரு பொருளைப் பற்றி பெயர் முதலிய பாகுபாடுகளோடு கூடிய ஞானம -