பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 சைவசித்தாந்தம் ஓர் அறிமுகம் யம் (தமிழில் மறம், அறியாமை பற்று, வறுமை) என்னும் நான்கும் தீயவையாகும். கன்மம் முதலிய நல்லவை நான்கும் ஒன்றன்பின் ஒன்றாகக் காரண-காரிய முறையில் தோன்றி ஐசுவரியம் வந்தவுடன் அதன்மம் முதலிய தீயவை நான்கும் ஒன்றன்பின் ஒன்றாக அவ்வாறு தோன்றி அநைசுவரியம் வந்து நிற்கும். அநைசுவரியம் வந்தபின் முன் போலவே கன்மம். என்ற நல்லது தோன்றும். இப்படியே இப்புத்தி தத்துவம் ஒரு சக்கரம்போல் சுழல, இப்பாவகங்கள் அச்சக்கரத்தில் உள்ள ஆரைக்கால்கள் போல் விரைவாக மாறி மாறி வருதலின் உயிர் இப்பாவகங்களில் அழுந்தி, இன்பம், துன்பம், மயக்கம் (சுகம், துக்கம், மோகம்) என்பவற்றில் சுழன்று உழலும். அளவிலாப் பாவகத்தால் அமுக்குண்டு' என்ற மணிவாசகப் பெருமானின் வாக்கு ஈண்டு நினைக்கத் தக்கது. இப்பாவகங்களில் நல்லவை நான்கும் சாத்துவிக குணத்தால் உள்ளனவாகும். அவைராக்கியம் ஒன்றே இராசத குணத்தால் உளதாவது. ஏனைய மூன்றும் தாமத குணத்தால் உளவாவன. சாத்துவிககுணத்தால் இன்பமும், இராசதகுணத் தால் துன்பமும், தாமத குணத்தால் அவ்விரண்டுமாயிருக்கும் மயக்கமும் உளவாகும். - (இ) அகங்காரம்: புத்தி தத்துவத்தினின்றும் இராசத குணம் மிக்குடைய அகங்காரம் என்னும் தத்துவம் தோன்றும். இஃது ஆன்மா யான் இதனைச் செய்வேன்' என்று அகங்கரித்து எழுச்சியுறுவதற்குக் கருவியாகும். எனவே, இக்கருவி இல்லையாயின், உயிர் எந்த ஒரு செயலிலும் செல்லுதற்கு எழுச்சியற்றதாகிவிடும். இங்ங்னம் அகங்கார தத்துவம் எல்லா வகையான. எழுச்சிகட்கும் காரணமாய் இருத்தலால், பல தத்துவங்கட்கு 65. திருவா. கண்டபத்து-8