பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238 சைவசித்தாந்தம் ஓர் அறிமுகம் னின்றும் வாக்கு, பாதம், பாணி, பாயு, உபத்தம் என்னும் கன்மேந்திரியங்கள் ஐந்தும் தோன்றும். அருந்தமிழில் இவை மொழி, கால், கை, எருவாய், கருவாய் என்று வழங்கப் பெறும், இவையும் தத்துவங்களாகப் பேசப்படுமிடத்து நா முதலிய இடங்களில் நின்று பேசுதல் முதலிய செய்யும் ஆற்றல் களையே குறிக்கும். வைகாரியகங்காரங்களினின்றும் முறையே ஒன்றன்பின் ஒன்றாகத் தோன்றும் வாக்கு முதலிய ஐந்தும் முறையே மொழிதல், புடைபெயர்தல், இடுதல், ஏற்றல், கழிப்பன கழித்தல், இனப்பெருக்கம் செய்தல் என்றும் தொழில் களைச் செய்யும். இவ்வைந்து தொழில்களும் முறையே வசனம், கமனம், தானம், விசர்க்கம், ஆனந்தம் என்று வடமொழியில் கூறப்பெறும் எனவே, வசனம் முதலிய ஐந்தும் கன்மேந்திரியங்களின் - விடயம் - புலன் என்பது தெளிவாகும். வாக்கு முதலிய ஐந்தும் தொழில் செய்வதற்குக் கருவியாத லின், கன்மேந்திரியங்கள் என்று வழங்கப்பெறும். (இ) தந்மாத்திரைகள் தாமதாசகங்காரமாகிய பூதாதி யகங்காரத்தினின்றும் சத்தம், பரிசம், ரூபம், ரசம், கந்தம் என்னும் தந்மாத்திரைகள் ஒன்றன்பின் ஒன்றாகத் தோன்றும். பூதங்கட்கு முதற்காரணமாய் நிற்றல்பற்றியே இவ்வகங்காரம் ‘பூதாதியகங்கரம்’ எனப்பெயர் பெற்றது என்பது அறியப் படும். பூதங்கள் ஐந்து என்பதும், அவை பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம் என்பதும், அருந்தமிழில் அவை நிலம், நீர், தீ வளி, விசும்பு என்று வழங்கப்பெறும் என்பதும் நாம் அறிந்தவையே. இங்குக் கூறியமுறை ஒடுக்கமுறை பற்றியதாகும். தோற்றமுறையில் அவை ஆகாயம், வாயு, 71. இந்த நிலை பாலின் தன்மை முழுதும் நீங்காமலும் தயிரின் தன்மை முழுதும் தோற்றாமலும் உள்ள நிலைமையைப போன்றதாகும்-என்று சொல்லி வைக்கலாம்.