பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவங்கள் 3 (பாசம்) 241 சத்தம் வல்லோசை, மெல்லோசை இடையோசை என்பவற் றோடு கூடிப் புலனாகி நிற்றலை விசிட்டமாய் நிற்றலாகும். அதனால் அவ்வேறுபாடின்றி ஓசை எனப் பொதுமையில் நிற்பதே கேவலம். இந்நிலையே சத்த தந்மாத்திரை என்பது. இவ்வாறே வாயுவின் சிறப்புக் குணமாகிய் பரிசம் வாயுவினிடத்தில் தட்பம், வெப்பம் முதலாய பல்வேறு வகையாயும், தேயுவின் குணமாகிய உருவம் தேயுவினிடத் தில் செம்மை, கருமை, வெண்மை, பசுமை, பொன்மை முதலாகப் பல்வேறு வகையாகவும், அப்புவின் சிறப்புக் குணமாகிய இரதம் அப்புவினிடத்தில் இனிப்பு, கசப்பு, புளிப்பு முதலாகப் பல்வேறு வகையாயும், பிருதிவியின் சிறப்புக் குணமாகிய கந்தம் பிருதிவியினிடத்தில் சுகந்தம், துர்க்கந்தம் என இருவேறு வகைப்பட்டுப் பலவாயும் காணப்படும். இவை இங்ங்ணம் வேறுபட்டு வெளிப்படநிற்கும். நிலையே அவ்வப் பூதங்கள் விசிட்டமாய் நிற்கும் நிலையாகும். அவ்வாறின்றிப் பொதுமையில் பரிசம், உருவம், இரதம், கந்தம் என்னும் அள வாய் நிற்றலே தந்மாத்திரை’ என உணர்ந்து தெளியப்படும். இன்னோர் உண்மை: சத்த தந்மாத்திரை, பரிச தந்மாத்திரை, உருவ தந்மாத்திரை, இரத தந்மாத்திரை, கந்த தந்மாத்திரை எனவழங்குதல்பற்றி அத் தந்மாத்திரை ஒவ் வொன்றும் சத்தம் முதலிய ஒவ்வொன்றாகவே நிற்கும் போலும் என மயங்குதல் கூடாது. ஏனெனில் சத்தம் ஒழிந்த ஏனைய நான்குமாத்திரைகளும் பூதங்களில் சொல்லியது போல அமைந்து, அதனதன் சிறப்புக் குணம் பற்றி பரிச தந்மாத்திரை, உருவதந்மாத்திரை, இரத தந்மாத்திரை, கந்த தந்மாத்திரை என வழங்கப் பெறுகின்றன. - எனவே, பூதாதி அகங்காரத்தினின்று தந்மாத்திரைகள் தோன்றுங்கால் முதற்கண் சத்தம் ஒன்றேயாய்ச் சத்த தந்மாத்