பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 தத்துவங்கள் - 3 (பாசம்) 24 தந்மாத்திரையினின்றும் பிருதிவியும் தோன்றும் என்பது காட்டப்பட்டது. (iii) ஐம்பெரும் பூதங்கள் (அ) தந்மாத்திரை ஐந்தனுள் ஒவ்வொன்றினின்றும் ஒவ்வொரு பூதம் தோன்றும். பூதங்கள் ஐந்து. அவை பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம் என்பன. தந்மாத்திரைகள் பற்றிக் கூறும்போது பூதங்கள் பற்றிக் கூறியவற்றை ஈண்டு நினைவு கூர்ந்து தெளியலாம். இப்பூதங்கள் தத்தம் முதற்காரணமாகிய தந்மாத்திரைகளின் சத்தம் முதலிய குணங்களைப் பெற்றிருத் தலின், அவற்றை அறியும் செவி முதலிய ஞானேந்திரியங் கட்கு நிலைக் களமாய் நின்று அவற்றிற்கு வலிமையைத் தந்து நிற்கும். அதுவன்றி வாக்கு முதலிய கன்மேந்திரையங்கட்கும் நிலைக்களமாய்ப் பேசுதல் முதலியவற்றிற்குத் துணைபுரிந்து நிற்கும். ஆகாயம் முதலிய பூதங்கள் ஐந்தும் சத்தம் முதலிய குணங்கள் ஐந்தனையும் ஒன்று முதல் ஐந்து ஈறாக ஒவ்வொரு குணத்தையும் ஏற்றமாகப் பெற்று நிற்கும். இதனை, பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி’’ என்பன முதலாக வரும் திருமொழிகளாலும் உணர்ந்து கொள்ளலாம். காரியத்தின் தன்மையே காரணத்திலும் இருக்கும் என்பது ஒர் உண்மை. ஆதலால் இவற்றிற்கு முதற்காரண மாகிய தந்மாத்திரைகள் இத்தன்மையனவேயாகும். அதாவது சத்த தந்மாத்திரையொன்றே தனிப் பொருளாய் நிற்க ஏனைய தந்மாத்திரைகள் நான்கும் முன் சொல்லியவற்றோடு தாம் 72. திருவா. போற்றித்திருவகவல் அடி, (137-138)