பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவங்கள் . 3 (பாசம்) 245 வேற்றுமை காட்டாது ஒற்றுமைப்பட வைத்து பொதுமையிந் கூறிப் போந்தன. சிவாகமங்கள் அவ்வாறின்றித் தத்துவங்களின் தோற்ற ஒடுக்கங்களை நுண்ணிதாக விளக்கக்கருதி எழுந்தன வாதலின் அவற்றுட் கூறியவாறே மேற்குறித்த வேதப் பகுதிக்கும் தேவாரத் திருவருட்பாடலுக்கும் பொருள் கொள்ளுதல் வேண்டும். - - - (ஆ) பூதங்களின் குணமும் செயலும் ஆகாயம் முதலிய பூதங்களில் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு தனிப்பட்ட குணம் உண்டு. ஆகாயத்தின் குணம், வெளியாதல் செயல், எப்பொருட்கும் இடங்கொடுத்தல், வாயுவின் குணம், நில்லாது அசைதல்; செயல், பரந்து கிடக்கும் பொருள்களை ஒருங்குதிரட்டல் குவித்தல். தேயுவின் குணம் வெம்மை (சூடு); செயல், சுட்டு ஒன்றுபடுத்தல் அல்லது பாகம் பண்ணுதல். அப்புவின் குணம், தண்மை குளிர்ச்சி), செயல், பதம் செய்தல் (மென்மைப்படுத்தல்). பிருதிவியின் குணம், திண்மை (கடிதனமாதல்) செயல், எப்பொருளையும் தாங்குதல். உலகாயதர் ஆகாயம் என்று ஒருபொருள் இல்லை; யாதொரு பொருளும் இல்லாதிருப்பதே ஆகாயம் என்று கூறுவது தவறு. இதற்கு விடை இல்லாமை இல்லாமையைத் தருமே அன்றி, இருப்பதைத் தராது. நிலம் இல்லையென்றால் தாங்குதல் இராது போகுமேயன்றி, மற்றொரு செயல் இராது. அதுபோல் யாதொரு பொருள் இல்லாமையே ஆகாயம் எனின், ஆகாயத்தால் யாதொரும் செயலும் நிகழாதிருத்தல் வேண்டும். ஆனால், எப்பொருளும் இருப்பதும், உலாவுவதும் ஆகாய வெளியிலேதான். ஆகவே, அச்செயல் நிகழ்ச்சிக்கு இடமாய் இருக்கும் ஆகாயத்தை இல்லை என்று கூறுதல் தவறு. அஃது அறியாமையால் கூறுவதாகும். நிலத்தின்மீது கட்டப்பெறும் மாளிகைகளின் அகல நீளங்கட்கு நிலம் பற்றுக்