பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 சைவசித்தாந்தம் - ஓர் அறிமுகம் கோடாக இருப்பது போல, அவற்றின் உயரத்திற்கு ஆகாயம் பற்றுக் கோடாயிருத்தல் வெளிப்படை. பொருள்கள் ஒன்றோடொன்று தாக்கும் பொழுது எழும் ஒசை வேறுபாட்டிற்குக் காரணம் ஆகாயத்தின் வெளி அப்பொருளினுள் வேறுபட்டிருத்தலேயாகும். ஆகாயமே இல்லையெனின் ஓசையே எழாது. ஆகவே, ஓசையைக் குணமாக உடையதாய் இடங்கொடுத்தலைச் செய்யும் ஆகாயம் உள்பொருளேயாதல் அறியப்படும். "நிலம் தீ நீர்வளி விசும்போடைந்தும் கலந்த மயக்கமாதலின்” எனத் தொல்காப்பியரும், "பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும்.” என்று திருவள்ளுவரும் பூதங்கள் ஐந்து எனக் கூறுதலைக் காணலாம். (இ) பூதங்களின் வடிவம், நிறம் முதலியவை தத்து வங்களின் இயல்பை உள்ளவாறு உணர்வது அவற்றிற்கட்டுற்று நில்லாது நீங்குதற் பொருட்டேயாகும். அங்ங்ணம் நீங்கும் வழிகளில் அவற்றை அதிதேவர்களின் வழி வழிபட்டு நீங்கும் முறை உண்டு. அம்முறையில் யாவராலும் நன்கறியப்பெற்ற பூதங்கட்கு வடிவம், நிறம், குறி, எழுத்து, அதிதேவர் என்பவற்றை ஆகமங்கள்கூறும். பிருதிவி: இதற்கு வடிவம் நாற்கோணம், நிறம் பொன்மை குறி (அடையாளம்) வச்சிராயுதம்: எழுத்து லகர மெய், அதிதேவர், பிரமன். அப்பு: இதற்கு வடிவம் பிறை நிறம் வெண்மை, குறி தாமரை மலர் எழுத்து வகரமெய், அதிதேவர் திருமால். 74. தொல். பொருள். மரபு.2 75. குறள். 271 (கூடாவொழுக்கம்)