பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248 சைவசித்தாந்தம் - ஓர் அறிமுகம்: 'அனந்தர் என்னும் வித்தியேசுவரர் தோற்றி ஒடுக்குவதால் அவை ஏழும் வித்தியாதத்துவங்கள் எனப் பெயர் பெற்றன. (இ) சிவம், சக்தி, சதாக்கியம், ஈசுரம், சுத்த வித்தை என்னும் ஐந்தையும் சத்தமாயையிலிருந்து சிவபெருமானே தோற்றி ஒடுக்குவதால், இவை சிவதத்துவங்கள் எனப் பெயர் பெற்றன. மேலும், சிவபெருமான் அருவம், அருவுருவம், உருவம் என்னும் மூவகைத் திருமேனிகளுடன் எழுந்தருளியிலிருந்து ஐந்தொழில் புரிவதற்கு இவ்வைந்து தத்துவங்களேயாதல் பற்றியும் இவை சிவதத்துவங்கள் எனப்பட்டன. (ஈ) தத்துவம் முப்பத்தாறனுள் சுத்தமாயையின் காரியமாகிய சிவதத்துவம் ஐந்தும் இறைவனுக்கு இடமாகி நின்று தமக்குக் கீழ் உள்ள தத்துவங்களை இயக்கி நிற்பதால் அவை பிரேரக காண்டம்’ எனப்படும். அசுத்தமாயையின் காரியங்கள் ஏழும் ஆன்மாவைப் போகம் நுகர்வதற்குத் தகுதி செய்தலின் இவை போசயித்திருகாண்டம்’ என வழங்கப் பெறும். பிரகிருதியின் காரியங்களாகிய ஆன்ம தத்துவம் இருபத்து நான்கும் முக்குணவடிவாய் ஆன்மாவிற்கு நுகர்ச்சியைத் தருதலின் இவை போக்கிய காண்டம் என்று நுவலப் பெறும். (உ) பிரேரக காண்டமாகிய சிவதத்துவங்கள ஐநதும ஆணவத்தோடும் கன்மத்தோடும். கலவாது நிற்றலால் சுத்தம்’ எனப்படும். போசயித்திருகாண்டமாகிய வித்தியா தத்துவங்கள் ஆணவத்தோடும், கன்மத்தோடும் கலந்திருப்பினும், குண ரூபமாய் நில்லாமையால், ஒரளவு தூய்மையாதலின் மிச்சிரம் எனப்படும். போக்கிய காண்டமாகிய ஆன்ம தத்துவங்கள் ஆணவத்தோடும் கன்மத்தோடும் கலந்து முக் குணரூபமாய் நிற்றலின் அசுத்தம்’ என்று சொல்லப்பெறும்.