பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவங்கள் - 3 (பாசம்) 249 (w) மூவகை உயிர்கள்-சரீரங்கள் (அ) மூவகை உயிர்களுள் விஞ்ஞானகலர்' எனப் படும் ஒரு மலம் உள்ள உயிர்கட்கு வரும் தனு கரண, புவன போகங்கள் சுத்தமாதலால் அவையெல்லாம் சுத்த தத்துவத்தி னின்றும் தோன்றுவனவே; அதனால் விஞ்ஞானகலரின் சரீரங்கள் வைந்தவ சரீரமாகும். வைந்தவம் - விந்துவின் காரியம். (ஆ) பிரளயாகலர் எனப்படும் இருமலம் உடைய உயிர்கட்கு வரும் தனு, கரண, புவன, போக்கியங்கள் மிச்சிரமாதலால் அவையெல்லாம் வித்தியாதத்துவங்களி னின்றும் தோன்றுவனவாகும். அதனால் பிரளயாகலரது சரீரம் மாயேய சரீரமாகும். மாயேயம் - மாயையின் காரியம். (இ) சகலர் எனப்படும் மும்மலம் உடைய உயிர்களுக்கு வரும் சரீரம் அசுத்தமாதலால் அவையெல்லாம் ஆன்ம தத்து வங்களின்றும் தோன்றுவனவாகும். அதனால் சகலரது சரீரம் பிராகிருத சரீரமாகும். பிராகிருதம் - பூமியின் காரியம். சகலரை ஒழிந்த ஏனை இருதிறத்தாரின் சரீரங்களும் பிரகிருதி யோடு தொடர்பின்மையால் அவையிரண்டும் அப்பிராகிரு தம் - பிரகிருதியுடன் தொடர்பில்லாதவை என்பது அறிந்து தெளியப்படும். אxיצ (ஈ) முக்குணங்களின் செயற்பாடு: பிரகிருதியின் காரியங்களே முக்குணவடிவாய் நின்று மயக்கத்தைச் செய்தலின், அவை இல்லாதவர்கட்கு மயக்கம் இல்லை. மயக்கம் என்றால் என்ன? எல்லாம் முதல்வன் செயலேயாய் இருக்க, அதை உணராது எல்லாச் செயல்கட்கும் தம்மையும் பிறரையும் தலைவராக நினைந்து செருக்கும், பகையும் கொள்ளுதலாகும். இதுவே யான் என்னும் செருக்கு என்று