பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவங்கள் . 3 (பாசம்) 251 படி நான்கு தோள்கள், முக்கண், கறைமிடறு, மான், மழு இவற்றையுடைவர். இவர் பிரகிருதி புவனங்கட்கெல்லாம் தலைமை எய்தி மூவரும், தேவரும் முதலிய சகலவர்க்கத்தி னர் அனைவரையும் ஆளும் தகைமையுடையவர். அதனால் இவர்வழி நிகழும் செயல்களெல்லாம் பரமசிவனது செயல் களாய் நிற்கும் என்பது உளங்கொள்ளப்படும். இதுபற்றியே இவர் அவ்வவ் அவதாரங்களில் கொண்ட மூர்த்தங்கள் பலவும் "மாகேசுவர மூர்த்தங்கள் என வழங்கப்பெறுகின்றன என்ப தும் அறியப்படும். இவருக்குத் தோற்றமும் ஒடுக்கமுமாகிய இடம் மாயா தத்துவமாயினும் புருடத் தத்துவத்தில் நின்று பிரகிருதி புவனங்களையெல்லாம் ஆளுவர். இவர் புருட தத்துவத்தை இதயம் போலவும், அவ்யத்கமாகிய பிரகிருதியை இடப்பாதி போலவும், வியக்தமாகிய குணதத்துவத்தை வலப்பாதி போலவும் அதிட்டித்து நின்று அவற்றில் முறையே உருத்திரன், மால், அயன் என்னும் குணமூர்த்திகளைத் தோன்றுவிப்பர். அதனால் இம்மூவர்கட்கும் இத்தத்துவங்களே தோற்றமும் ஒடுக்கமுமாகிய இடமாகும். சிவபெருமானது வலப்பாகத்தில் பிரமனும், இடப்பாகத்தில் மாயோனும், இதயத்தில் உருத்திரனும் தோன்றினர் என்று புராணங்களில் கூறப்பெறுவதற்கு இதுவே கருத்து என்பது அறியலாகும். குணவேறுபாடு தோற்றாமையின் அவ்யக்தமே மாயோன் பள்ளி கொள்கின்ற பாற்கடல் என்று வழங்கப்பெறுகின்றது என்பதையும், அவனது உறங்குதல் என்பது அவ்யக்தத்தில் நிற்றலையே குறிக்கும் என்பதையும் அறிந்து தெளியலாம். குணதத்துவம் பிரகிருதியின் தத்துவங்கள் அனைத்தையும் தோற்றுவிக்கும் நிலையில் வியக்தமாய் நிற்றலால் அதன்கன் தோன்றி நிற்கும் பிரமன் நாற்றத்தையுடைய மலரின்கன் தோன்றி அதன்கண்ணே வீற்றிருப்பவனாகச் சொல்லப்படு கின்றான். பிரமன்தோன்றி வாழும் தாமரைமலர், மாயோனது